எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அஜித்

140 0

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று அஜித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியொன்றில் கரூர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அதில் கரூர் விவகாரத்துக்கு ஒருவர் மட்டுமே காரணமல்ல, அதற்கு அனைவருமே பொறுப்பு என்று குறிப்பிட்டு இருந்தார் அஜித். அந்தப் பேட்டியை விஜய்க்கு எதிராக அஜித் பேசியிருப்பதாக இணையத்தில் பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள்.இதனை மறுக்கும் வகையில் விளக்கமளித்து பேட்டியொன்று அளித்துள்ளார் அஜித். அப்பேட்டியில் அஜித், “நான் இதற்கு முன்பு அளித்த பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிக்கிறார்கள். எப்போதுமே விஜய்க்கு நல்லது செய்ய விரும்புகிறேன். எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள். கரூரில் நடந்தது ஒரு துரதிர்ஷடவசமான சம்பவம். இதற்கு முன்பு ஆந்திராவில் திரையரங்கம், பெங்களூரு கிரிக்கெட் விழா போன்றவற்றிலும், பல நாடுகளிலும் இது போன்று நடந்துள்ளது.மேலும், பலர் என் வம்சாவளியைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். என்னைப் பிடிக்காதவர்கள் எப்போதுமே வேற்று மொழி பேசுபவர் என்று சொல்கிறார்கள். அதே மக்கள் என்னை தமிழன் என்று ஆரவாரம் செய்யும் நாள் வரும். நான் கார் பந்தயத்தில் பெரிய சாதனை படைப்பேன். அப்போது முழு மாநிலமும், தேசமும் பெருமைப்படும். அதற்காக என் ஆன்மாவை அர்ப்பணிக்கப் போகிறேன்.அனைவரும் உங்கள் குடும்பத்தை முதலில் கவனித்துக் கொள்ளுங்கள். என் படங்களை திரையரங்குகளில் பார்ப்பது சரி என நினைத்தால் பாருங்கள். நான் ஒருபோதும் என் படங்களைப் பார்க்க மக்களை வலியுறுத்தமாட்டேன். அதே போல் அரசியலில் வாக்கு கேட்க மாட்டேன். வாக்களிப்பதை ஒரு குடிமகனின் கடமையாகவே பார்க்கிறேன். தயவுசெய்து மோட்டார் விளையாட்டுகளை ஊக்குவியுங்கள். இப்போதும் நேர்காணல்கள் அளிப்பது அவற்றை ஊக்குவிக்க மட்டுமே. எப்போதுமே படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ஏனென்றால் அவை மக்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

Posted by - March 16, 2026 0
கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் அங்குள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக களப்பணியைத்…

வாழ்க தமிழ்நாடு…பாரதியார் பாட்டு…சட்டமன்ற உரையை நிறைவு செய்த ஆளுநர்

Posted by - January 9, 2023 0
வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிறைவு செய்தார். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர்…

எங்களுக்கு பின் கட்சியில் வந்தவர்கள் எல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி விட்டனர் – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு

Posted by - December 4, 2022 0
RS BHarathi | நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம் – ஆர்.எஸ்.பாரதி கட்சிக்கு…

ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - January 9, 2026 0
ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார்…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *