ஐப்ரோ த்ரெட்டிங் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

344 0

புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது வலிக்கும், சுற்றியிருக்கும் பகுதிகளில் சிவந்து போய், லேசாக வீக்கமாகத் தெரியும்.ஐப்ரோ த்ரெட்டிங் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க... | Eyebrow  Threading Don't make these mistakes

சில நாள் வரை எரிச்சலும் அரிப்பும் ஏற்படும். எனவே, ஐப்ரோ த்ரெட்டிங் செய்யப் போகிறீர்கள் என்றால், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் செய்யக்கூடாது என்பதையும் இங்கே பார்க்கலாம். ஒரு சிலருக்கு புருவங்கள் மிகவும் அடர்த்தியாக பெரிதாக காணப்படும்.

அவர்கள் த்ரெட்டிங் செய்தால் நிச்சயமாக சில நாட்களுக்கு புருவங்களைச் சுற்றி சிவந்து, கண்கள் லேசாக வீக்கமாகத் தான் இருக்கும். எனவே புருவம் அடர்த்தியாக இருப்பவர்கள் த்ரெட்டிங் செய்வதற்கு பதிலாக ட்ரிம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், அழகான மென்மையான புருவங்களைப் பெறலாம்.

நீங்கள் திரெட்டிங் செய்து கொள்ள விரும்பினால்,மேக்கப்பை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். கண் மை, மஸ்காரா என்று எதையுமே போட்டுக்கொள்ள கூடாது. அதேபோல திரெட்டிங் செய்த பிறகு குறைந்தது ஒரு நாளைக்காவது எந்த மேக்கப் சாதனத்தையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

திரெட்டிங் செய்த சில மணி நேரத்திலேயே உங்களுக்கு ஏதேனும் க்ரீம் அல்லது கிளென்சர் பயன்படுத்த வேண்டும் என்பது போல உணர்வு தோன்றும். திரெட்டிங் செய்யும்போது ஃபாளிக்கில் திறக்கப்படுவதால், நீங்கள் கிளென்ஸர் அல்லது க்ரீம்கள் எதேனும் பயன்படுத்தினால் அந்த இடத்தில் புண்ணாக மாறி தழும்பாக அடையாளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொருவருக்கும் அவரவரின் புருவத்தின் வளர்ச்சி, அடர்த்தி மற்றும் வடிவத்துக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட கால அளவில் திரெட்டிங் செய்வது சரியாக இருக்கும். ஒரு சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும், ஒரு சிலருக்கு மாதம் ஒருமுறையும், மிகவும் மெல்லிசான புருவம் இருப்பவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திரெட்டிங் செய்தால் கூட போதுமானது.

எனவே உங்கள் முகத்திற்கு, உங்கள் புருவத்திற்கு ஏற்றவாறு எந்த கால இடைவெளியில் நீங்கள் திரெட்டிங் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களுடைய அழகு கலை நிபுணரிடம் கேட்டு அதையே பின்பற்ற வேண்டும்.

இடையில் நீங்கள் சுயமாக திரெட்டிங் செய்து கொள்ள வேண்டாம். அவசரமாக ஓரிரு புருவ முடிகளை நீங்கள் ட்வீசரில் நீக்கினால் கூட, புருவத்தின் அழகு கெட்டுவிடும். எவ்வளவு நேர்த்தியாக, வலியே இல்லாமல் புருவம் திருத்தப்பட்டாலும், மிகக் குறைந்த அளவிலாவது வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படலாம். எனவே வீக்கம் மற்றும் சிவந்திருப்பது போன்றவற்றைக் குறைப்பதற்கு ஐஸ் கட்டி அல்லது கற்றாலை ஜெல்லை பயன்படுத்தலாம்.

Related Post

50வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கும் பழைய போட்டியாளர்.. குழாயடி சண்டைக்கு குருநாதர் போட்ட அஸ்திவாரம்

Posted by - November 19, 2024 0
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 நாட்களை தாண்டி இருக்கிறது. இதில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா மற்றும் ரியா என ஐந்து போட்டியாளர்கள்…

திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?

Posted by - April 21, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று…

Bigg Boss Tamil Season 7: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க்… கொண்டாட்டத்தில் ஹவுஸ்மேட்ஸ்!

Posted by - December 19, 2023 0
ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பூர்ணிமா, நிக்ஸன், மாயா, விஜய், அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம்…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்து ஹீரோ ரெடி!.. வைரலாகும் அவரது மகனின் புகைப்படம்

Posted by - August 12, 2023 0
ஜெயம் ரவி ஆரம்பத்தில் தனது அண்ணனின் இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த ஜெயம் ரவி அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களுடன்படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *