ஒரு மாநிலமே ஆன்லைன் மோசடியில் சிக்கிய பரிதாபம்; ஒரே ஆண்டில் ரூ.64 கோடி இழந்த மக்கள்

216 0

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், ஆன்லைன் மோசடியில் சிக்கிய 64.2 கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 64.2 கோடி ரூபாயை, சைபர் கிரைம் மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளது.

புதுச்சேரியில், சைபர் கிரைம் போலீசார் இணைய வழி மூலம் நடக்கும், மோசடிகள் பற்றி பல் வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி இருந்தும் தினத்தோறும் பொதுமக் கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர்.

இது குறித்து சைபர்கிரைம் போலீசார் கூறுகையில்;

பொது மக்களை மும்பை சைபர் கிரைம் போலீசார் பெயரை கூறி, பார்சலில் போதைப் பொருள் வந்துள்ளது என, மிரட்டுவது. வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு புதுப்பிக்க வேண்டும் எனவும், அதற்காக பாஸ்வேர்டு, ஓ.டி.பி., (otp) எண்ணை வாங்கி, பணம் பறிப்பது.

டெலிகிராம், இன்ஸ்டாகிராம் பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில், டாஸ்க்கை முடித்தால், அதிக பணம் தருகிறோம் எனக் கூறி ஏமாற்றுவது. போலி விளம்பரங்களை செய்து, பணம் பறிப்பது. பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என பல்வேறு வகையில் மோசடி கும்பல், பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல், 64.2 கோடி ரூபாயை பொது மக்களை ஏமாற்றி அபகரித்துள்ளனர். இதில், பெண்களுக்கு எதிரான 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வழக்குகளில், குற்றவாளிகளை கைது செய்து, 11 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரை 1930 எண் ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு வேண்டும்… சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

சிக்கிக் கொள்ளாதீங்க… வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Related Post

கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: கோழிக்கோட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு

Posted by - September 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து,…

பெண் டாக்டரின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

Posted by - August 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை…

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்: வீடியோவை பகிர வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted by - July 20, 2023 0
மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும்…

இன்று பிறந்த நாள்… மோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்; பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்!

Posted by - September 17, 2024 0
புதுடில்லி: இன்று 74வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பிறந்த நாள்…

அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்…

Posted by - March 21, 2025 0
இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த, ரூ.54,000 கோடி மதிப்பில் மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *