”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு

172 0

Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி” தான் விஜய் என திமுக அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.

Minister SekarBabu: வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை மட்டுமல்ல 234 தொகுதிகளையும் திமுகவே கைப்பற்றும் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜயை கடுமையாக சாடிய அமைச்சர் சேகர் பாபு:

சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்கிற திமுகவின் நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராமால் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல, 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, திமுக மீது எப்படியெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்டுகிறதோ, அப்போதெல்லாம் 80கிமீ வேகத்தில் பயணிக்கும் திமுக தொண்டன் 100 கிமீ வேகத்தில் பயணிப்பான். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினை அரியணை ஏற்றும் வரை எங்களுடைய வேகம் குறையாது” என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில், திமுகவின் 200 தொகுதி வெற்றி என்ற இலக்கை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையாக சாடி இருந்தார். இந்நிலையில் தான், அதனை குறிப்பிட்டு சேகர்பாபு கடுமையாக பதிலடி தந்துள்ளார்.

விஜய் பேசியது என்ன?

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கான அடிப்படை சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களுடன் இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால், நீங்கள் உங்கள் சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்களின் கூட்டணி கணக்குகள் அனைத்தையும், 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என விஜய் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

கமலின் இழிவான அரசியல், விஜய் ஒரு பொடிசு.. கடுமையாக சாடிய இயக்குனர்

Posted by - August 29, 2024 0
அரசியல் ஆசை பலருக்கு இருந்தாலும் பெரும்பாலும் நடிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், சீமான் தற்போது விஜய் என சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் களம் காண்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்கள் மார்க்கெட்…

இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வரக்கூடாதா? அப்ப இந்த எண்ணெயை உங்க சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..

Posted by - October 27, 2023 0
தற்போது சமையலில் பயன்படுத்த ஏராளமான எண்ணெய்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களைப் பார்க்கும் போது எந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற ஒரு…

துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி

Posted by - August 7, 2025 0
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக…

கிருஷ்ணாவின் போதைப்பொருள் பரிசோதனை ரிசல்ட் வெளிவந்தது, திடீர் திருப்பம்

Posted by - June 26, 2025 0
ஸ்ரீகாந்த் நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். ஆனால் இவர் போதைப் பொருள் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் கைதானார். படம்…

எட்டாம் வகுப்பு மாணவன் மது போதையில் கலாட்டா: இது தான் திமுகவின் சாதனையா? – அன்புமணி

Posted by - April 4, 2026 0
“எட்டாம் வகுப்பு மாணவன் மது போதையில் கலாட்டா செய்துகொண்டிருக்கிறார். இது தான் திமுகவின் சாதனையா? முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *