‘கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திமுக அரசு’ – அண்ணாமலை குற்றச்சாட்டு

211 0

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. – அண்ணாமலை

கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு செயலிழந்து நிற்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, நேற்று கள்ளச்சாராயம் அருந்தியதால், பலர் உயிரிழந்தும், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும் வருகின்றனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது. டாஸ்மாக் சாராயக் கடைகள் மூலம், ஒரு தலைமுறையையே குடிக்கு அடிமையாக்கியதோடு மட்டுமல்லாமல், இன்று கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திறனற்ற திமுக அரசு. காவல் துறை அதிகாரிகளைப் பலிகடாவாக்கிவிட்டு, முழுப் பிரச்சினையையும் பூசி மெழுகப் பார்க்கிறார் முதலமைச்சர்.

தமிழகத்தில், கட்டுப்பாடற்ற சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் பெருகியிருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. சாராய அமைச்சர் செந்தில் பாலாஜியோ, சட்டம் ஒழுங்கு பற்றி கவலை இல்லாமல், சாராய விற்பனையைப் பெருக்குவதில் மட்டும் புதுப்புது திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை அமைச்சகத்தின் இந்த ஆண்டு கொள்கை அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாகக் கள்ளச் சாராய மரணங்கள் நடைபெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, மீண்டும் திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது.

பத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான பின்னரே, நடவடிக்கை என்ற பெயரில் நாடகமாடுகிறது. தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இதன் மூலம் இத்தனை நாட்கள், இவர்கள் அனைவரும் அரசுக்குத் தெரிந்தே கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது திமுக அரசு. அரசுப் பள்ளிகளில், மாணவ மாணவியருக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து தராமல் அலட்சியப்படுத்தி, வெறும் விளம்பர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சட்ட ஒழுங்கையும் காப்பாற்ற இயலாமல், பொதுமக்களின் உயிருடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாகச் செயலிழந்து கிடக்கிறது.

தமிழக அரசு உடனடியாக, இந்த துயர சம்பவத்திற்குக் காரணமான அனைவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருக்க, தொடர் கண்காணிப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்.

Related Post

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - September 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - June 2, 2023 0
 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்,…

உங்க இதயம் செயலிழக்காமல் இருக்க… மாரடைப்பு வராமல் தடுக்க… இந்த விஷயங்கள மறக்காம ஃபாலோ பண்ணுங்க!

Posted by - November 25, 2023 0
இதய செயலிழப்பு என்பது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு முக்கியமான மருத்துவ நிலை. இது பொது சுகாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. உலகளவில்…

வாடகை வீட்டுதாரர்கள்.. அப்பார்ட்மென்ட்வாசிகள்.. இந்த 2 மேட்டரையும் மறக்காதீங்க.. சென்னை புயலின் பாடம்

Posted by - December 6, 2023 0
சென்னை: சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகி வருகின்றன. சென்னையில் பெய்த மழையானது,…

மாணவிகள், இளம்பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ பதிவு செய்த பாதிரியார்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

Posted by - March 16, 2023 0
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.   இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். கடந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *