கார்டை செருகுவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்

337 0

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 54). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு ஏ.டி.எம். கார்டை செருக முயன்றபோது எந்திரத்தில் இருந்து தானாக பணம் வந்துள்ளது.கார்டை செருகுவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம்.  எந்திரம் | ATM machine gave Rs 50 thousand before inserting card

கார்டையே செருகவில்லை, அதற்குள் பணம் வருகிறதே என ஆச்சர்யத்துடன் அவர் அந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்தார். அதில் 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. இது அனைத்தும் ரூ.500 நோட்டுகள் ஆகும். இந்த பணம் தன்னுடையது இல்லை என்பதால் அதனை நேர்மையுடன் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றார்.

அங்கு பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார். ஜெயச்சந்திரனின் நேர்மையை வங்கி மேலாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து வங்கி மேலாளர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதோடு, டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. ஜெயச்சந்திரன் செல்வதற்கு முன்பு வாடிக்கையாளர் யாராவது பணத்தை எந்திரத்தில் டெபாசிட் செய்திருக்கலாம்.

ஆனால் எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பணம் உரிய கணக்கில் டெபாசிட் ஆகாமல் இருந்திருக்கும். இது தெரியாமல் அந்த வாடிக்கையாளர் சென்றிருக்கலாம். ஜெயச்சந்திரன் சென்றபோது அந்த பணம் வெளியே வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை வரவழைத்து அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்” என்றார்.

Related Post

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

தூதுவளை.. அத்துடன் வேப்பிலை.. பற்களை பாதுகாக்கும் ஆச்சரிய இலைகள்.. ஈறுகளை பாதுகாக்கும் துளசியிலை

Posted by - December 8, 2023 0
சென்னை: பற்களை பாதுகாப்பதில் உணவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. அந்தவகையில், சிலவகை இலைகளின் முக்கியத்துவத்தை இங்கு பார்க்கலாம். பொதுவாக, பற்களின் நிறம், ஈறுகளின் நிறத்தை வைத்தே, ஒருவரின்…

சென்னை வெள்ளமும் அரசியலும்… பொய் சொன்னவர்கள் மீது வழக்கு தொடருங்கள்… உச்சநீதிமன்ற வழக்கறிஞர் R.கிருஷ்ணமூர்த்தி

Posted by - December 7, 2023 0
சென்னை: உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் அதிகாரிகள்,அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடுக்க அழைப்புவிடுத்துள்ளார். இன்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்ட…

சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி மீது சாடல்

Posted by - December 12, 2023 0
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமானவை என…

முழங்கால் வலி இருக்கா? கற்பூரவள்ளி ஒன்னு போதுமே.. மூட்டு வலியை விரட்டியடிக்கும் 10 டிப்ஸ்கள் பாருங்க

Posted by - December 20, 2023 0
சென்னை: பாடாய் படுத்தும் முழங்கால் வலி, மூட்டுவலிக்கு எளிய முறையிலேயே நிவாரணம் தேடலாம்.. அந்தவகையில், வீட்டிலிருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே, தீர்வை காணலாம். முழங்கால் வலி, மூட்டுவலிகளுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *