”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

204 0

செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன்

நம்மை விரட்டியே காவல்துறையினரே நம்மை ராஜ மரியாதையுடன் அமர வைப்பார்கள் என யூட்யூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் பேசியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வாசன் வந்திருந்தார். இதனை முன்கூட்டியே அறிந்த டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) ஆதரவாளர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

2 சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் செய்தனர். இதனால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

காரில் வந்த டிடிஎஃப் வாசன் அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டபோது அவரை வழியனுப்புவதற்கு மீண்டும் 2 சக்கர வாகனங்களில் அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு அவரது ஆதரவாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அண்ணா மேம்பாலம் அருகே வரும்பொழுது சாலையில் சென்றவர்கள் மீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தனர்.

200க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்து அவற்றை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் உடன் வந்து வாகனங்கள் அனைத்தையும் செல்போன் மூலம் படம் எடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

முதலில் காவல்துறையினர் மீது தவறு இல்லை. அவர்கள் நல்ல விதத்தில் நடந்து கொண்டனர் என கூறிய வாசன், தற்போது காவல்துறையினர் தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாக தனது ரசிகர்களிடம் விளக்கம் அளித்தார்.

யூட்யூப் லைவ்வில் பேசிய அவர், “நம்மல விரட்டுன போலிஸ்காரங்களே நம்மல ராஜ மரியாதையோட ஒக்கார வைப்பாங்க. இது வாய் வார்த்தையா சொல்றது இல்ல” என பேசினார்.

மேலும், “நம்ம மேல 5 வழக்கு போட்ருகாங்க. இதுக்கு வருத்தப்படல. நம்ம தான் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி கேஸ் வாங்குறோமே. என்னை அடிச்சிருந்தா கூட மன்னிச்சிருப்பேன். ஆனா அவங்க பசங்க மேல கை வச்சுட்டாங்க. நான் போலீஸ்ட கேட்டதுக்கு அவங்க கல் எடுத்து அடிச்சாங்க தம்பினு போலீஸ் பொய் சொன்னாங்க.

செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா?” என தெரிவித்தார்.

Related Post

காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

Posted by - April 26, 2024 0
காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!! பரபரப்பான அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார். இந்திய ஜனநாயக…

ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - February 7, 2024 0
நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

Posted by - December 14, 2022 0
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில்…

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பிப்.2-ம் தேதி வரை கனமழை… உடனடியாக கரைக்கு திரும்புங்கள்… வானிலை மையம் அலெர்

Posted by - February 1, 2023 0
#News | #NewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN…

‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..’ அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்…

Posted by - December 14, 2022 0
Udayanidhi Stalin | தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *