கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?

165 0

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், போலீஸ் தரப்பு கூறிய தகவல்கள்: தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தலைமறைவாக இருந்த அந்த மூன்று பேரை போலீஸார் பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் சந்திரசேகர் என்ற காவலருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடும்பொழுது மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்று பேர் காலிலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், அவர்கள் கீழே விழுந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். இதேபோல அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்த காவலர் சந்திரசேகரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்த்து. இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும்,
இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

வெயில் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் : எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்..!

Posted by - April 22, 2023 0
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேரடி வெயிலில் செல்வது அசௌகரித்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று…

3 பேரின் பதவி பறிப்பு – காரணம் என்ன..?

Posted by - September 30, 2024 0
தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி…

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் அதிரடி

Posted by - November 6, 2023 0
எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது – நீதிபதி. சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர்…

“நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது” புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - January 22, 2025 0
‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். என்னவாக இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும்…

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: யாரெல்லம் தகுதியானவர்கள்; விண்ணப்பிப்பது எப்படி… முழு விவரம்!

Posted by - April 22, 2024 0
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *