covai

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?

198 0

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், போலீஸ் தரப்பு கூறிய தகவல்கள்: தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தலைமறைவாக இருந்த அந்த மூன்று பேரை போலீஸார் பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.17622279463068இதில் சந்திரசேகர் என்ற காவலருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடும்பொழுது மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்று பேர் காலிலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், அவர்கள் கீழே விழுந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். இதேபோல அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்த காவலர் சந்திரசேகரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்த்து. இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

17622279713068

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும்,
இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி ராஜா…

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி எம்.எல்.ஏவும் தி.மு.க ஐ.டி விங் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை…

கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! – தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் – என்ன விஷயம் தெரியுமா.?

Posted by - June 17, 2025 0
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேமுதிக ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான் கூட்டணிக்கு 40 என்ற புதிய மந்திரம். அது என்ன…

சேனைக்கிழங்கு.. நீங்க கருணைக்கிழங்கு சாப்பிடறீங்களா? அப்ப இதை மறக்காதீங்க.. பெண்ணின் அருமருந்து சேனை

Posted by - November 28, 2023 0
சென்னை: பெண்களின் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் உடலில் காணப்படும் ஒரு…

ஏங்க.. கூமாப்பட்டியை விடுங்க.. விருதுநகரில் சுத்திப்பார்க்க இவ்ளோ இடம் இருக்குதா!

Posted by - June 28, 2025 0
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கூமாபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூமாபட்டி கிராமத்தின் அழகை வர்ணித்து வெளியிட்ட வீடியோக்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *