சனாதன பொங்கல் விழாவில் திமுக MLA! இந்து மக்கள் கட்சி நிகழ்ச்சியால் உடன்பிறப்புகள் உஷ்ணம்!

260 0

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனாதன கொள்கைக்கு நேர் எதிர் கொள்கையை கொண்ட இயக்கம் திமுக என்பது ஒரு பக்கம் இருப்பினும், திமுகவை மிக மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வரும் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி நடத்தும் விழாவுக்கு செல்வதா என திமுக எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனுக்கு எதிராக சொந்தக்கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சனாதனத்தை எதிர்த்தும், விமர்சித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் பேசி வரும் நிலையில்  சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்து கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினையும், திமுகவையும் மிக கடுமையாக அர்ஜுன் சம்பத் விமர்சித்து வரும் நிலையில் அவரது கட்சி விடுத்த அழைப்பை ஏற்று அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சாக்கோட்டை அன்பழகன்.

DMK Mla Sakkottai Anbalagan participation in the Sanatana Pongal function in Kumbakonam

Related Post

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - January 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

கோவைக்கு பதில் மயிலாடுதுறை? கமல்ஹாசனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த சிக்கல்

Posted by - February 26, 2024 0
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை…

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக ஏமாற்றி இளைஞர்கள்-இளம்பெண்களிடம் பணமோசடியில் ஈடுபடும் கும்பல்

Posted by - November 23, 2023 0
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி…

கனமழைக்கு வாய்ப்பு

Posted by - September 26, 2023 0
#Rain | #RainAlert | #ChennaiRains | #Weather | #pixeltv | #pixelmedia தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *