சார்ஜ் போடவே வேண்டாம்… ஒளியின் சக்தியில் இயங்கும் வயர்லெஸ் கீபோர்டு அறிமுகம்!

165 0
  • இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது.
  • லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 என்ற வயர்லெஸ் கீபோர்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒளியை மட்டுமே சக்தியாகப் பயன்படுத்தும் ஒரு வயர்லெஸ் கீபோர்டு ஆகும். இந்த சாதனம் லாஜிடெக்கின் “லாஜி லைட்-சார்ஜ்” தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளியிலிருந்தும் கூட ரீசார்ஜ் செய்ய முடியும்.முழுமையாக சார்ஜ் செய்தவுடன், கீபோர்ட்டை நான்கு மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்த கீபோர்டில் உள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டை சார்ஜ் செய்ய வேண்டிய தேவையை நீக்குகிறது.இந்த கீபோர்டு முழு அளவிலான அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு மடிக்கணினியின் டைப்பிங் அனுபவத்தை வழங்கும். மேலும் இதில் சிசர்-ஸ்விட்ச் கீ வழங்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டை பல சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஈஸி-சுவிட்ச் கீ பயன்படுத்தி மூன்று சாதனங்களுக்கு மத்தியில் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கிறது.லாஜிடெக் நிறுவனம் இந்த கீபோர்டின் வணிக மயமாக்கப்பட்ட சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 என்ற வெர்ஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. இந்த வெர்ஷன் 23 ஷார்ட்கட்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது.

    லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. யுனிவர்சல் மற்றும் மேகோஸ் மாடல்களின் விலை 99.99 டாலர்கள் ஆகும். இதன் வணிக மயமாக்கப்பட்ட வெர்ஷனின் விலை 109.99 டாலர்கள் ஆகும்.

Related Post

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

Posted by - July 29, 2023 0
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…

கர்ப்பிணி மனைவியை சரமாரி துப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபர்- வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது

Posted by - November 16, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில்…

அசாமில் மார்க்கெட்டில் தீவிபத்து- 150 கடைகள் சேதம்

Posted by - February 17, 2023 0
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால்…

BSNL போதும்டா சாமி.. இனி ரூ.18-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா..

Posted by - December 10, 2024 0
பிஎஸ்என்எல் சிம் கார்டு கொடுங்க, உடனே 4ஜி சேவைக்கு மாத்துங்கனு ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் சொல்ல வைக்கும்படி அந்த நிறுவனத்தின் திட்டங்கள் இருக்கின்றன. மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத…

Gpay, Phonepay பயன்படுத்துறீங்களா..? வருது புதிய கட்டுப்பாடுகள்!

Posted by - December 20, 2022 0
இதுவரை எத்தனைமுறை வேண்டுமானாலும் யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பி வந்த நிலையில், தற்போது பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் யுபிஐ ஆப்கள் மூலம் நடைபெறும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *