சிக்கிய சிஎஸ்கே.. ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி

221 0

மும்பை அணி 15.4 ஓவரில் சென்னை நிர்ணயித்த இலக்கை சுலபமாக அடைந்தது, ரோகித் சர்மா 76 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது.

சென்னை 176:

மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்தது, தொடக்க வீரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர், ரவீந்திரா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அறிமுக வீரர் மாத்ரே அதிரடியாக விளையாடி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ஷேக் ரசீத் 19 ரன்களுக்கு வெளியேற சென்னை அணி அடுத்த சில ஓவர்களுக்கு ரன் அடிக்க முடியாமல் திணறியது, 11 ஓவருக்கு பிறகு தான் சென்னை அணி அதிரடியாக ஆடத்தொடங்கியது. சென்னை தங்கள் இறுதி 9 ஓவர்களில் 103 ரன்களை எடுத்தது, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

ரோகித் அதிரடி:

177 ரன்கள் என்கிற இழக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா அதிரடி தொடக்கம் தந்தனர், குறிப்பாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரோகித் சென்னை அணியின் பந்துவீச்சை பின்னியெடுத்தார், மறுமுனையில் ரிக்கல் நல்ல தொடக்கம் கொடுத்த மும்பை அணி முதல் விக்கெட்டுக்கு இந்த சீசனில் முதல் 50 விக்கெட் பார்ட்னர்சிப்பை அமைத்தது. ரவீந்திரா ஜடேஜாவின் ஓவரில் ரிக்கல்டன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சூர்யா-ரோகித் சம்பவம்:

அடுத்த சூர்யக்குமார் யாதவ் வந்தது முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார், ஒரு ஒரு ஓவருக்கும் தலா ஒரு சிக்ஸ் அல்லது பவுண்டரியை மும்பை அணி பேட்ஸ்மென்கள் அடித்துக்கொண்டே இருந்தனர், சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனி பல பவுலிங் மாற்றங்களை செய்தும் சென்னை அணிக்கு பலன் கிடைக்கவில்லை, இதற்கிடையில் ரோகித் சர்மா அடித்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய சூர்யக்குமார் யாதவ் தனது அரைசதத்தை கடந்தார். \

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6வது விக்கெட்டுக்கு முன்னேறியுள்ளது.

Related Post

கடைசி வரை திக்… திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!

Posted by - March 24, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 முறை சாம்பியன்…

18 வருட காத்திருப்பு ஓவர் -? ஃபைனலில் பெங்களூரு – பஞ்சாப்

Posted by - June 2, 2025 0
18 வருட காத்திருப்பை முடித்து முதல் கோப்பையை வெல்லப்போவாது யார் என்பது? பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை பந்தாடிய பஞ்சாப்: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு…

CSK Vs RR.. ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி..!

Posted by - April 13, 2023 0
சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில்  வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள்…

தோனி மீது பதிவான 10 புகார்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்… காரணம் இதுதான்…!

Posted by - May 18, 2023 0
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. விளம்பர விதிமுறைகளை மீறியதாக தோனி…

வருண் Vs கோலி – பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?

Posted by - March 22, 2025 0
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *