சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்

238 0

ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும் கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது. இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.

ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில் வருகிற 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வருகிற 24-ந்தேதி வெளியேற்றப்படும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Post

ட்ரம்புடன் கைகோர்ப்பு.. இந்தியாவிற்கு எதிராக பேசும் கனடா பிரதமர், ஊறுகாய் ஆகும் பாக்., பிரச்னை

Posted by - October 8, 2025 0
இந்தியா – பாகிஸ்தான் மோதலை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பை, கனடா பிரதமர் பாராட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலை அமெரிக்க…

கனடாவில் 45 ஆயிரம் ஏக்கர் காடுகளை சேதமாக்கிய காட்டுத்தீ

Posted by - June 10, 2023 0
கனடாவில் இதற்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. ஒரு இடத்தில் பற்றிய தீயை அணைப்பதற்குள் அடுத்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது. இதனால்…

அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு

Posted by - June 18, 2025 0
பாகிஸ்தான் ராணுவ தளபதியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப்-அசிம் முனிர் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின்…

விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீண்ட அதிசயம்

Posted by - June 10, 2023 0
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது.…

ரூ.12 லட்சம் செலவழித்து நாய் உடை அணிந்த யூ-டியூப் பிரபலம்

Posted by - July 31, 2023 0
சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த யூ-டியூப் பிரபலம் ஒருவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *