சேற்றுப்புண் அல்ல.. கருப்பு பூஞ்சையை விட மோசமான பாக்டீரியா.. கொஞ்சம் ஏமாந்தால் கூட ஆளே காலிதான்!

187 0

சென்னை:

சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து மீலியாய்டோசிஸ் எனும் பாக்டீரியா அதிக அளவில் பரவி வருவதாக சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெரு வெள்ளம் ஏற்படும் போது பொது சுகாதார அச்சுறுத்தல் நிலை உருவாகிறது. மாசடைந்த நீருடன் மனிதர்கள், நாய், பசு போன்ற விலங்குகள் நேரடி தொடர்புக்கு வரும் சூழலை உருவாக்குகிறது. ஏற்கனவே மண்ணிலும் நீரிலும் பல ஆபத்தான நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் வியாபித்து உள்ளன. அவற்றுள் முக்கியமான அச்சுறுத்தல் தரும் பாக்டீரியா பர்கோல்டெரியா ஸ்யூடோமேய் ( Burkholderia pseudomallei). இது பரப்பும் நோய்க்கு பெயர் மீலியாய்டோசிஸ் ஆகும்.சேற்றுப்புண் அல்ல.. கருப்பு பூஞ்சையை விட மோசமான பாக்டீரியா.. கொஞ்சம்  ஏமாந்தால் கூட ஆளே காலிதான்! | A New bacteria is spreading after Chennai  Floods - Tamil Oneindia

பொதுவான சாதாரண சூழ்நிலைகளில் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுத்துவதில்லை. எனினும் பெரு வெள்ளம் போன்ற சூழ்நிலைகளில் கால்கள் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் புண்கள் உண்டானவர்கள் தொற்று மிகுந்த மாசடைந்த நீருடன் நேரடி தொடர்பில் வரும் போதும் மாசடைந்த நீரைப் பருகும் சூழல் ஏற்படும் போதும் காற்றில் இருக்கும் இந்த பாக்டீரியாவை நுகர்ந்து உள்ளிளுக்கும் போதும் இந்த பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகக் கூடும். இந்தத் தொற்று அரிதினும் அரிதான ஒன்று.

கோவிட் காலத்தில் கருப்புப் பூஞ்சை எனும் ம்யூகார் மைகோசிஸ் தொற்று ஏற்பட்டிருந்ததை அனைவரும் அறிவோம். பொதுவான காலங்களில் வருடத்திற்கு ஓரிருவருக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த தொற்று திடீரென அது பொதுவாக கண்டறியப்படும் அளவுகளை விட அதிகமாக பதிவு செய்யப்பட்டது. அதைப் போன்றே பொதுவாக வருடம் ஓரிரு பேருக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மீலியாய்டோசிஸ் 2015 சென்னை பெருவெள்ள சூழலுக்குப் பிறகான மாதங்களில் மாதத்திற்கு ஓரிரு தொற்றுகள் ஏற்படும் அளவு உயர்ந்தது தெரிய வருகிறது.

இந்த பாக்டீரியா தொற்றைப் பொருத்தவரை நீண்ட கால நோய் நிலையை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் சிறுநீரகம், கல்லீரல் , நுரையீரல் , எலும்புகள், மூளை போன்ற முக்கிய உறுப்புகளை நோய்க்கு உள்ளாக்கும் தன்மை இருக்கும். சிகிச்சை செய்யாவிடில் மரண விகிதம் அதிகம் கொண்ட நோயாக இருக்கிறது.

அறிகுறிகள்

1. தீவிர காய்ச்சல்

2. குளிர் நடுக்கம்

3. தலைவலி

4. இருமல்

5. மூச்சு விடுவதில் சிரமம்

6. மூக்கொழுகுதல்

7. வயிற்றுப் பகுதி / இடுப்புப் பகுதியில் வேனில் கட்டி

8. பசியின்மை

9. எடை குறைப்பு

10. கழலைகள் வீக்கம்

நீண்ட நாட்களாக தொடரும் காய்ச்சலுக்கு இந்த நோயும் காரணமாக இருக்கலாம். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயர்கள், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், தலாசீமியா, புற்று நோய், எச் ஐ வி , நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

எப்படி இந்த தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது?

– கால்கள் மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள புண்களுக்கு முறையான மருத்துவம் செய்ய வேண்டும்

– நீர் புகாவண்ணம் புண்களை பராமரிக்க வேண்டும்

– வெளியே செல்லும் போது செருப்பு மற்றும் ஷூ அணிந்து வெளியே செல்ல வேண்டும்

– கைகளை அவ்வப்போது சோப் போட்டுக் கழுவ வேண்டும்

தீராத காய்ச்சல், வேனில் கட்டி, இருமல்/ மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பின் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். தொற்றுக்குள்ளானோரிடம் காணப்படும் புண்களின் சீழ் வடிதலில் இந்தக் கிருமி காணப்படும். இவர்களின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட திரவங்களில் இந்தக் கிருமி காணப்படும். இந்தக் கிருமிக்கு எதிராக செயல்படும் ஆண்டியபாடிக் மருந்துகள் உள்ளன. விரைவில் கண்டறிந்து சரியான சிகிச்சை செய்தால் நோயரை மீட்டெடுக்க முடியும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Related Post

விஜய் பாஜகவின் பி டீமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்

Posted by - February 14, 2024 0
அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்த பிறகு அவரை பாஜகவின் பி டீம் என சிலர் கூறி வருவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி…

விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?

Posted by - December 15, 2024 0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டால் அவருக்காக அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து 3வது முறையாக…

திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் – உடல் தானம்

Posted by - March 25, 2025 0
நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்க்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கு முன்னதாகவே ஷிஹான் ஹுசைனி, தனது உடலை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஹுசைனி…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

வெள்ளிக்கிழமை எந்த சாமியைக் கும்பிடணும்? செல்வம், அமைதி, குடும்ப வளர்ச்சிக்கான முக்கிய வழிபாடுகள் 2025ல் வைரல்!

Posted by - December 12, 2025 0
2025ல் ஆன்மீக ஆர்வம் அதிகரிச்சதோட, “வெள்ளிக்கிழமை எதை கும்பிடணும்? எது செல்வத்துக்கு நல்லது?”ன்னு Google-ல search பண்ணுறவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. அதனால Friday devotional updates இப்போ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *