திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் – உடல் தானம்

232 0

நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்க்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கு முன்னதாகவே ஷிஹான் ஹுசைனி, தனது உடலை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஹுசைனி காலமானார்

திரைப்படம் மற்றும் கராத்தே பயிற்சிகள் மூலம் பிரபலமான ஹுசைனி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தான் உயிர் வாழ தினசரி 2 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது, நீண்டநாள் உயிர் வாழ முடியாது என அவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து, திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நள்ளிரவு 1.45 மணியளவில் ஹுசைனி (60 வயது) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல் தானம்

முன்னதாக ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையில், மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன். என்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார். அவரது இந்த முடிவினை திரையுலகினரும், ரசிகர்களும் கனத்த இதயத்துடன் பாராட்டினர்.

சினிமாவில் ஹுசைனி

மதுரையை சேர்ந்த ஹுசைனி 1986ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பத்ரி படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்ததன் மூலம் நடிகரான பிரபலமானார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், ஹுசைனியின் நடிப்பு கவனம் ஈர்த்தது. தனியார் தொலைக்காட்சியிலும் இவரது கராத்தே பயிற்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதேபோல் அதிரடி சமையல் என்கிற பெயரிலும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சினிமாவை தாண்டி வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சியாளராகவும் திகழ்ந்தார். நுற்றுக்காணக்கானோருக்கு இதுதொடர்பானபயிற்சிகளையும் அளித்துள்ளார்.

விஜய்க்கு வைத்த கோரிக்கை

மருத்துவமனையில் இருந்தபோது வெளியிட்ட வீடியோவில், “நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை பவன் கல்யாண் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டு சென்றார். அதேபோல் விஜய்க்கு ஒரு கோரிக்கை. அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்” என  ஷிகான் ஹுசைனி கோரிக்கை விடுத்து இருந்தார். அதேநேரம், திரைத்துறையினர் பலர் ஹுசைனியை மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்தாலும், விஜய் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவுகிறது.

Related Post

அமோனியா வாயு கசிவு விவகாரம்… தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவு

Posted by - December 27, 2023 0
சென்னை : சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

ஒரே மாசத்துல உங்க உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த 5 விஷயத்தை டெய்லி ஃபாலோ பண்ணுங்க..!

Posted by - November 29, 2023 0
உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணி. யாராலும் எளிதாக உடல் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைப்பதற்கு சீரான உணவுகள், உடற்பயிற்சி…

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Posted by - March 21, 2025 0
வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையம்…

நீங்க கையால சாப்பிடுறதுக்கு பின்னாடி இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா? இனிமே ஸ்பூனை யூஸே பண்ணாதீங்க!

Posted by - November 3, 2023 0
இன்றைய நவநாகரீக உலகில், கைகளால் சாப்பிடுவது கெளவுரவ குறைச்சலாகவும், ஸ்பூன் மற்றும் முட்கரண்டியில் சாப்பிடுவது ஸ்டைலாகவும் நாகரீகமாகவும் கருத்தப்படுகிறது. உண்மையில், இவை நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய…

Pongal Gift: பொங்கல் தொகுப்பு – என்னென்ன பொருட்கள் கொடுக்கப்படும்? கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு

Posted by - December 13, 2024 0
இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/-…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *