ஜனநாயகன்’ படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை நடைபெற்றது.’ஜன நாயகன்’ படம் தொடர்பான பிரச்னைகளை, சீலிடப்பட்ட கவரில் தணிக்கை வாரியம் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பி.டி.ஆஷா கேட்டறிந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தார்.நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில், “ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. அந்தப் புகாரை ஊக்கப்படுத்த முடியாது. ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு படத்தை எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்த பிறகு தலைவருக்கான அதிகாரம் முடிந்தது. மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. விரைந்து யுஏ தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், “மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவியுங்கள், விசாரணைக்கு ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும். பிற்பகல் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.அதன்படி இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. அப்போது, ‘இன்றைய தினமே மேல் முறையீடு செய்ய என்ன அவசரம்?’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், “எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரிய தலைவரின் அதிகாரம் குறித்து நீதிபதி முடிவெடுத்துள்ளார். ஆனால் இது குறித்து விரிவாக விவாதித்திருக்க வேண்டும். நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது தலைமை நீதிபதி, “தணிக்கை வாரியத்துக்கு எதற்காக உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதற்கான அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார். சென்சார் வாரியம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை வரும் 21-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை.
Related Post
விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..
ஜனநாயகன் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகி இருக்க வேண்டும்.சென்சார் போர்டு படத்தின்…
ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்… இது தான் காரணமா?
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது. தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர்…
50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நடிகை நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா?- மிரண்டு போன ரசிகர்கள்
நடிகை நயன்தாரா நடிகை நயன்தாராவை தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம். கேரளாவில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல…
கைவிடப்படுகிறதா சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ – என்ன சொல்கிறார் தாணு
வாடிவாசல் கைவிடப்படுவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும்…
வாரிசு இசை வெளியீட்டு விழா… பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? : ஏன் தெரியுமா?
varisu audio launch | வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கின் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. விஜயின் ‘வாரிசு’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (469)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (283)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

- சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

- TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

- கும்பகோணம் த.வெ.க வேட்பாளர் புது முயற்சி….
