தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடு – வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்வீட்..!!

160 0

தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடுங்கள் என பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.

தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!! #samsungprotest

Related Post

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

Posted by - December 4, 2022 0
தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார். இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி…

விஜய்க்கு போன் போட்ட அஜித்.. ஆடிப் போன வெற்றி கழகம்

Posted by - August 27, 2024 0
விஜய் இடம் போனில் பேசிய அஜித் மேலும் உங்களின் அடுத்தடுத்த நகர்வை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதோடு 2026 தேர்தலில் வெற்றி உங்களுக்கு தான் என்று…

பல்வேறு இடங்களில் கைவரிசை- காதலனுடன் ஜாலியாக இருக்க கொள்ளையடித்த இளம் பெண்

Posted by - August 15, 2023 0
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது வள்ளியாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜோதி வெங்கட்ராமன்.விரதம் மனைவி கோமதி. இவர்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.…

பருவமழை தீவிரம்… மழை நிலவரங்களை கண்காணித்து வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம்

Posted by - November 30, 2023 0
சென்னை: இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *