தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை – சசிகலா பகிரங்க குற்றச்சாட்டு..!!

235 0

தமிழ்நாட்டில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளதாக சசிகலா கூறியுள்ளார்.

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி அவர்களை பள்ளியிலேயே கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாததால், யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் என்ற அவல நிலை இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

இவ்வாறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாநிலத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு ஏழை, எளிய, சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற, பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக மாறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள இளம் வயதினர் தவறான பாதைகளுக்கு சென்று விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும். எனவே, திமுக தலைமையிலான அரசு கொஞ்சமாவது தமிழக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Post

வாக்காளர் பட்டியல் திருத்தம் – வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்

Posted by - November 4, 2025 0
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது.TN SIR ECI:  சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், இன்று…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு : ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

Posted by - March 23, 2023 0
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர்  பரபரப்பான வாதங்களை முன்வைத்த நிலையில், இரு தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள்…

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

Posted by - November 27, 2025 0
எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து…

ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - January 9, 2026 0
ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார்…

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

Posted by - April 3, 2026 0
சட்டமன்ற  தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள என்டிஏ வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதே தனது பணி என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். கேரள கண்ணூரில் செய்தியாளர்களிடம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *