சென்னை: திமுக அரசின் தோல்வியே சென்னை வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனை செய்யத் தவறி, மாநகரத்தையே வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது.ஒவ்வொரு ஆண்டும் வடிகால் அமைப்பதற்கென சில பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, வெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது அப்பட்டமான முறைகேடாகும்.2015ம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காதுவிட்டு மக்களை வெள்ளப் பாதிப்புக்குள்ளாக்கியது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகும்.இனி எந்தக் காலத்திலும் சென்னை வெள்ளக்காடாக மாறாவண்ணம் தடுக்கும்விதத்தில் நகரக் கட்டுமானத்தையும், வடிகால் அமைப்பையும் உருவாக்க வேண்டுமெனவும், வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படா வண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
Related Post
பச்சை நிறமே.. ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை, ஒக்கேனக்கல்! சூப்பராக மாறப்போகும் 7 சுற்றுலா தலங்கள்
சென்னை: குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்லக்கூடிய மலைவாசஸ்தலங்களான ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை போன்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு…
வெந்தயக்கீரை.. மளமளன்னு உடல் சதை கரையணுமா? சர்க்கரை நோயாளிகள் வெந்தயக்கீரையை மட்டும் விட்றாதீங்க
சென்னை: வெந்தயக்கீரை மட்டுமல்ல, இந்த செடியின் விதைகள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவமும், மகத்துவமும் நிறைந்தவையாகும். இந்த கீரையின் விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது. இளம் விதைகளில்…
சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்
weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என…
TN Rain Alert: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
TN Weather Update Today: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தெற்கு அந்தமான் கடல் பகுதியில்…
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும் அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (469)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (282)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

- சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

- TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

- கும்பகோணம் த.வெ.க வேட்பாளர் புது முயற்சி….

- இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!
