தொடர்ந்து வரவேற்பை பெறும் ‘வாரிசு’ பட பாடல்.. குஷியில் ரசிகர்கள்..

208 0

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாரிசு பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு போஸ்டர் ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று பார்வையாளர்களை குவித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ‘தீ தளபதி’ பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. வாரிசு படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

தெறி பட ஸ்டைலா..? தளபதி 69 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்.. இணையத்தில் கசிந்த தகவல்!

Posted by - October 17, 2024 0
எச்.வினோத் இயக்கி வரும் விஜயின் கடைசி படமான தளபதி 69ல் விஜயின் கதாபாத்திரம் இதுதான் என்ற தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது நடிகர் விஜய்யின் கடைசி படத்தில்…

“கும்பகோணத்தில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் செய்த விக்கி – நயன்”

Posted by - April 5, 2023 0
கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்ய விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சென்றிருந்தனர். தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக…

ஸ்ருதிஹாசன் முகத்துக்கு என்னாச்சு.. புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - November 29, 2022 0
ஸ்ருதி நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் அனைத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரது காதல் விஷயங்களை கூட இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக பகிரக்கூடியவர். அவரது முகத்தில் பிளாட்டிக் சர்ஜரி செய்ததை கூட…

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்.. இருவருக்கும் 16 வயது வித்தியாசம்

Posted by - November 10, 2023 0
சாரா அர்ஜுன் விக்ரமின் கெரியரில் தி பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்று தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் தான் சாரா அர்ஜுன். இவர் பிரபல நடிகர் ராஜ்…

விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை! ரசிகர்கள் ஷாக்

Posted by - January 30, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்தை இயக்குநர் ஹெச்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *