நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

324 0

சென்னை:

பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா?

மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய நிலக்கடலை.. இந்த நிலக்கடலையின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ரத்த நாளங்களை நிலக்கடலை பாதுகாக்கிறது.. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.. ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த கடலை கட்டுப்படுத்துகிறது..

நிலக்கடலை:

முதுமை தோற்றத்தை நீக்கி, இளமையை தக்கவைக்கிறது இந்த நிலக்கடலை. இதற்கு காரணம், வைட்டமின் C, E இரண்டுமே கடலையில் உள்ளதால், சருமத்துக்கு கவசம்போல பாதுகாக்கிறது.வேர்க்கடலை.. வறுத்த வேர்க்கடலை + பச்சை வேர்க்கடலை.. அடடா இது தெரியாம  போச்சே.. நோட் பண்ணுங்க மக்களே | Do you know the Health Benefits of Peanuts  and Ground Nut is the Best ...

சருமத்திலுள்ள காயங்களையும் குணப்படுத்தும் திறன் இந்த கடலைக்கு உள்ளது. . தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. எலும்புகள் தேய்மான பிரச்சனை இருப்பவர்கள், கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு நிலக்கடலை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

நரம்பு மண்டலம்:

மாங்கனீசு, பாஸ்பரஸ், வைட்டமின் B1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுகிறது… ஞாபக சக்தியையும் பெருக்குகிறது.. புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சக்தி இந்த நிலக்கடலைக்கு இருக்கிறது. இத்தனை நன்மைகள் இருந்தாலும், இந்த நிலக்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களும், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும், நிலக்கடலையை குறைத்து கொள்ள வேண்டும்.. அலர்ஜி பிரச்சனை முதல் சுவாசம் பிரச்சனை வரை வரலாம்.. சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் நல்லது.

யாரெல்லாம் தவிர்க்கலாம்:

சிலவகையான நோய்களில், நிலக்கடலையை சாப்பிட்டால், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, நோயாளியின் பிரச்சினைகளை இன்னும் அதிகரிக்க செய்துவிடுமாம்.. ஒருவேளை உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால், நிலக்கடலையை தவிர்த்துவிடலாம்.. இதனால், உடலில் அரிப்பு, வீக்கம், குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நிலக்கடலையை அதிகம் சாப்பிடக்கூடாது.. காரணம், இந்த நிலக்கடலையில் நிறைய சோடியம் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தை இன்னும் அதிகரிக்க செய்துவிடும்.. இதனால் இதயம் தொடர்பான நோய்களும் உருவாகிவிடும்.. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிலக்கடலையை அதிகமாக சாப்பிடக்கூடாது. அதேபோல, ஓவர் வெயிட் இருப்பவர்களும் நிலக்கடலையை அதிகம் சாப்பிடக்கூடாது.. நிறைய கலோரிகளும், கொழுப்புகளும் உள்ளதால், உடல் எடை மேலும் அதிகரித்துவிடும்.. மூட்டு வலி உள்ளவர்களும் நிலக்கடலையை தவிர்த்துவிட வேண்டும். அசிடிட்டி பிரச்சனை இருந்தாலும், நிலக்கடலையை தவிர்க்கலாம்..

ஊறவைத்த நிலக்கடலை:

எப்போதுமே நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி சாப்பிட சொல்கிறார்கள். இதனால், பித்தம் உடலில் அதிகம் சேராது.. அல்லது வேர்க்கடலையை கஞ்சியாக அல்லது வாழைப்பழம், தேன் சேர்த்து சாப்பிடுவதால், கூடுதல் பலம் கிடைக்கும். வறுத்த வேர்க்கடலையைவிட அவித்த நிலக்கடலை மிகவும் நல்லது.

Related Post

ஒரு வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருந்த 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்பு- போலீசார் அதிரடி நடவடிக்கை

Posted by - February 16, 2023 0
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் ‘அன்புஜோதி’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள…

எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் – புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்

Posted by - June 14, 2025 0
நான்தான் உண்மையான விவசாயி எனச் சொல்லி மக்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுவதாக, அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தேர்தலுக்காக எடப்பாடி அவசரகதியில் திட்டங்களை…

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சிறுமியின் பெற்றோருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்..!!

Posted by - March 7, 2024 0
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி…

அலப்பறை கிளப்புறோம்.. புஷ்பா 2 படத்தில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்

Posted by - December 6, 2024 0
புஷ்பா 2 படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழ அல்லு அர்ஜுன் ஷோவாக உள்ளது. ஆனால் பட ரிலீசுக்கு முன்பு…

பூண்டு விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

Posted by - February 16, 2024 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்யாவசிய காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. Garlic Price இதனையடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *