நீட்- ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

236 0

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படாமல் இருப்பதாகவும், அந்த ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்றும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில் அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனிதா பெயரிலான நினைவரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் நீட் தேர்வு ரகசியம் என்னவென்று தற்போது சொல்கிறேன்.நமது மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படும் போது வரும் எதிர்ப்புக்குரலே அந்த ரகசியம். அனிதாவின் பெயரை பார்க்கும்போது எல்லாம் நீட் தேர்வில் எதிர்ப்பு என்ற எண்ணம் நமது மனதில் இருக்கும். எந்தவித சமரசமும் இல்லாமல் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம்‌ தொடரும். பிரதமரை சந்திக்கும் போதும் இதைத்தான் கூறினேன். இதுதான் எங்களிடம் உள்ள ரகசியம்” என்று கூறினார்.

Related Post

3 பேரை திருமணம் செய்து மோசடி.எஸ்கேப்.. சிக்கிய கல்யாண ராணி..!

Posted by - April 18, 2023 0
2 குழந்தைகளுக்கு தாயானவர் புதுமணப் பெண் எனக் கூறி பல திருமணங்களை செய்து மோசடி செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம்,…

சந்தி சிரிக்கும் சட்ட-ஒழுங்கு? கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பாரா ஸ்டாலின்? வெயிட்டிங்கில் எதிர்க்கட்சிகள்

Posted by - April 28, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட-ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்க பதில் அளிக்க உள்ளதால், சட்டசபையில் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறை…

வேகவைத்த உருளைக்கிழங்கை குளிர்சாதன பெட்டியில் வைப்பது இந்த ஆபத்தான நோயை உண்டாக்குமாம்… ஜாக்கிரதை…!

Posted by - November 28, 2023 0
வேகவைத்த உருளைக்கிழங்கு எண்ணற்ற சமையலறைகளில் பல்துறை மற்றும் பிரியமான உணவாக இருக்கிறது, ஆனால் இதனை சேமிப்பது என்று வரும்போது, அதற்கு குளிர்சாதன பெட்டி சரியான இடமாக இருக்காது.…

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது… மீனவர்களுக்கு எச்சரிக்கை…

Posted by - November 29, 2023 0
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது…

டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ – முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்

Posted by - November 28, 2025 0
டிட்வா புயலால் சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலெர்ட் விடுத்துள்ளார். சென்னை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *