பழி தீர்க்க காத்திருக்கும் ரோகித் படை! – பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா தோனி படை..!

290 0

 ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை மும்பை அணி எட்டிப் பிடித்து அசத்தியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன. சென்னை அணி கடந்த மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக குஜராத் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. எனவே, சொந்த மைதானத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்த இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், மும்பை அணி 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இருந்த போதும், கடைசியாக ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து அசத்தியது. எனவே, ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் மும்பை அணி உள்ளது. மேலும், சென்னை அணிக்கு எதிராக முந்தைய லீக் ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முனைப்பு காட்டி வருகிறது.இந்தப் போட்டி குறித்து நேற்றைய பயிற்சிக்குப் பின் பேசிய மும்பை அணியின் இஷான் கிஷன், மலிங்கா போன்று சென்னை வீரர் பதீரனா பந்து வீசியபோதும், அவரை எதிர்கொள்வதற்காக, தாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

Related Post

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா….Sorry சர்பராஸ் கான்

Posted by - February 16, 2024 0
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், பட்டிதார் ஆகியோர் சொற்ப ரன்களில்…

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டி- துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது இந்தியா

Posted by - July 19, 2023 0
தென் கொரியா, சாங்வோன் நகரில் ஐ.எஸ்.எஸ்எப்.பின் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள்…

சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ! – தோனி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - May 24, 2024 0
தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன. 2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று…

தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் – ரோகித் சாதிப்பாரா?

Posted by - March 7, 2025 0
சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முடிவை பொறுத்து ரோகித் சர்மா, இந்திய அணியின் கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து முடிவு செய்ய பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ்…

இது வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை..இது ஒரு விக்ரமன் சார் படம் தான்!

Posted by - May 30, 2023 0
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *