பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய் ரூ.60 ஆயிரம் கோடி- வாய் உளறி பேசிய இம்ரான்கானால் சர்ச்சை

247 0

இஸ்லாமாபாத்:

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய் ரூ.60 ஆயிரம் கோடி- வாய் உளறி பேசிய இம்ரான்கானால்  சர்ச்சை | Tamil News Imran Khan says ghee in Pakistan costs PKR 600 billion  per kg

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது.

பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசின் தவறான நிர்வாகமே இதற்கு காரணமாகும். மாவு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ நெய் பாகிஸ்தான் மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நிதி நெருக்கடியை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. புற்றுநோய்க்கு சாதாரண வலி நிவாரணி மருந்து கொடுப்பது போல் அரசு நடவடிக்கை உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் இலங்கைக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை நமக்கு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார். நெய் விலையை 60 ஆயிரம் கோடி ரூபாய் என வாய் தவறி இம்ரான்கான் பேசியது அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை வைத்து பலரும் அவரை கேலி செய்து வருவதுடன் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

Related Post

இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை

Posted by - July 16, 2025 0
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் என, நாட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார். ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகளை, நாட்டோ…

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

Posted by - February 21, 2023 0
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்… அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

Posted by - December 10, 2022 0
முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான பியான்கா,…

சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்

Posted by - August 30, 2023 0
பெய்ஜிங்: காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள்…

வங்காளதேசத்தில் தீப்பிடித்து எரிந்த ரெயில்: 5 பேர் உடல் கருகி பலி

Posted by - January 6, 2024 0
வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *