”பாஜக மேலிடம் சொல்லித்தான் அண்ணாமலை பேசுகிறாரா?” கேள்விகளை அடுக்கிய ஜெயக்குமார்

220 0

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய அண்ணாமலை, மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பேசியதாகவும், பின்னர் முத்துராமலிங்க தேவர் ஆவேசம் அடைந்ததால் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து அண்ணா ஓடி வந்ததாகவும் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்தில் அண்ணாமலை திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

அண்ணாவை பற்றி யார் தவறாக பேசினாலும் நாக்கு அழுகிவிடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாபம் விடுத்தார்.முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அவதூறாக பேசினால் அதிமுகவினர் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அதிமுக தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பின்னர், பேரறிஞர் அண்ணா சர்ச்சைக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, ” யாருக்கும் அடிபணிந்து செல்ல வேண்டிய நிலை தனக்கு இல்லை, 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை இது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை போத்தனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேர்மை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்றும் கூறி இருந்தார்.இந்த விவகாரம் அதிமுக-பாஜக இடையே பெரும் பனிப்போரை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தனித்து போட்டியிட்டால் அண்ணாமலை நோட்டாவுக்கு கீழ்தான் ஓட்டு வாங்குவார். கூட்டணியில் பாஜக இல்லை என்றால் அவர்களுக்குத்தான் இழப்பு. அதிமுகவுக்கு இழப்பு இல்லை. கூட்டணியில் பாஜக இல்லை என்றால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் சந்தோஷப்படுகிறான். பாஜக மேலிடத்தில் கூறியும் அண்ணாமலை இப்படித்தான் பேசுகிறார் என்றால், பாஜக மேலிடம் சொல்லித்தான் பேசுகிறார் என்று அர்த்தம். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டியதுபோல தலைக்கணத்துடன் ஆடுகிறார் அண்ணாமலை. காலம் வரும்போது அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். என்றார்.

Related Post

கல்லீரலை வலுவாக்கும் விதை.. தலைமுடி வளர்ச்சி முதல் சரும நலன் வரை காக்கும் ஒரே விதை.. நாலஞ்சு போதும்

Posted by - November 27, 2023 0
சென்னை: பப்பாளி எந்த அளவுக்கு நமக்கு நன்மைகளை தருகிறதோ, அதைவிட அதிகமான நன்மைகளை தரக்கூடியதுதான், பப்பாளி விதைகள். கல்லீரலின் பாதுகாப்புக்கு இந்த பப்பாளி விதைகள் பேருதவி புரிகின்றன.…

வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

Posted by - July 10, 2023 0
நாமக்கல்: இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர்…

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் – போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம்!

Posted by - March 10, 2025 0
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரம்பூர் காவல்நிலைய போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - November 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

போலி இமெயில் முகவரி அனுப்பி சேலம் இரும்பு வியாபாரியிடம் ரூ.71.93 லட்சம் மோசடி

Posted by - August 2, 2023 0
சேலம்: சேலம் பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இரும்பு வியாபாரி. இவருக்கு கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *