நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி – நிதி அமைச்சகம் தகவல்

223 0

புதுடெல்லி:

மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது. இதில் நேரடி வரிகள் என்பதில் தனிநபர் மற்றும் கம்பெனிகள் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிமாற்ற வரி உள்ளிட்டவை அடங்கும். நேரடி வசூல் தொடர்பான விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.Direct Tax Collections Grow 24 percent in current financial year

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த 16-ம் தேதி வரையிலான நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 23.51 சதவீத அதிகம் ஆகும்.

நேரடி வரி வசூலுக்கான முழு ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ.18.23 லட்சம் கோடி ஆகும். அதில் 47.45 சதவீதம் தற்போது எட்டப்பட்டுள்ளது. நேரடி வரி வசூல் உயர்வுக்கு, நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்திருப்பதுதான் காரணம் ஆகும். தற்போதைய நேரடி வரி வசூலில் நிறுவனங்களுக்கான வருமான வரி ரூ.4.16 லட்சம் கோடி, பத்திர பரிவர்த்தனை வரி உள்ளிட்ட தனிநபர் வருமான வரி ரூ.4.47 லட்சம் கோடி அடங்கும். வரி செலுத்துவோருக்கு, கடந்த 16-ம் தேதி வரை ரூ.1.22 லட்சம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

BSNL-க்கு புயல் வேகம்.. 3 மாதத்துல 36 லட்சம்.. 4ஜி மகிமை.. சிம் கார்டு வாங்கியாச்சா.. குஷியில் கஸ்டமர்கள்!

Posted by - December 20, 2024 0
அங்க அடிச்சா.. இங்க வலிக்கும்.. இந்த டயலாக் இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு பக்காவாக பொருந்திவிட்டது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம்…

தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. – காப்பாற்றுவது யார்?

Posted by - August 8, 2025 0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் 1.75 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது.…

2 தொகுதிகளில் உங்களுடைய பெயர் இருந்தால் எங்கு வாக்களிக்க வேண்டும் தெரியுமா?

Posted by - April 18, 2024 0
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19- ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களும்.…

இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

Posted by - August 5, 2024 0
அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெள்ளிக்கிழமை…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

Posted by - May 5, 2026 0
மேற்குவங்க வரலாற்றில் முதல்முறையாக 206 தொகுதிகளில் வரலாற்று வெற்றியை பெற்று பாஜக ஆட்சியை அமைக்கிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *