பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் …

229 0

பொன்னேரி, பொன்னேரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நெசவாளர்களின் துயரத்தை போக்க எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதனை ஜெயலலிதா கடைப்பிடித்தார். இதன் காரணமாக நெசவாளர்கள் பயனடைந்தனர். அதேபோன்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கியபோது குறை கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்தபின் ரூ.1000 மட்டும் வழங்கினால் போதும் என்று நினைக்கிறது. இதனால், கரும்பு, மஞ்சள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை விளைவித்த ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

விவசாய தொழிலுக்கு மூடுவிழா செய்துவிட்டு ஏழைகள் வயிற்றில் அடிக்கக்கூடாது. எனவே அரசு ‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும். காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போன்று சிலர் அங்கும் இங்கும் பதவி சுகத்திற்காக செல்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கட்சி. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். பாராளுமன்ற தேர்தலிலும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவையும் அதிருப்தியில் இருக்கின்றன. அந்த கூட்டணியில் உள்ள 11 கட்சிகளும் கட்டி வைத்துள்ள நெல்லிக்காய் மூட்டை. அதை அவிழ்த்து விட்டால் சிதறி போய்விடும். தி.மு.க. கூட்டணி வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் தேய்ந்து போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

Pongal Gift: பொங்கல் தொகுப்பு – என்னென்ன பொருட்கள் கொடுக்கப்படும்? கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு

Posted by - December 13, 2024 0
இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/-…

சிறுத்தை நடமாட்டம்… மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

Posted by - April 5, 2024 0
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க…

இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?

Posted by - March 5, 2025 0
இன்றை அனைத்துக் கட்சி கூட்டத்தில், தொகுதி மறுவரயறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அனைத்துக் கட்சி கூட்டம்: சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது…

ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

Posted by - February 18, 2025 0
ஆசிரியர் பணி நியமனத்திற்கு இனி ”காவல்துறை சரிபார்ப்பு சான்று” கட்டாயமாக்கப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்…

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - October 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *