பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்- நடிகையின் கணவர் ஓபன் டாக்

224 0

#biggboss7 #vijaytv #bb7tamil #pixeltv #pixelmedia #tamilnews

விசித்ரா

பிக்பாஸ் 7வது சீசனில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடந்து வருவது நமக்கு தெரியும். இந்த டாஸ்க் இடையில் தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் குறித்து போட்டியாளர்கள் கூறினர்.

அதில் பிக்பாஸ் 7 விசித்ரா பேசும்போது, தான் நடிப்புக்கு வந்த புதிதில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் ஒருவர் தனது அறைக்கு அழைத்தார்.

அதோடு படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் இதனை இயக்குனரிடம் கூறியபோது அடித்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

அவர் யாரை கூறினார், எப்போது அந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி சமூக வலைதளங்களில் நிறைய தகவல் பரவி விட்டது. அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் ஏன் எதையும் தட்டி கேட்கவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகையின் கணவர்

இந்த நிலையில் நடிகை விசித்ராவின் கணவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர்,  இந்த சம்பவம் ஒரு கசப்பான அனுபவம், அதை மறக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அப்படி இருக்கும் போது விசித்ரா ஏன் இதை சொன்னார் என்பது தெரியவில்லை, எனக்கே பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது.என் பெரிய மகன் இதை பார்த்துவிட்டு கல்லூரிக்கு கூட போகவில்லை, மனமுடைந்து விட்டான், இனிமேல் தான் நான் அவரிடம் இதைப் பற்றி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.

Related Post

கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!

Posted by - January 3, 2026 0
என்னுடைய மனைவி சான்ட்ராவை கார் டாஸ்கில் இருந்து வெளியே பார்வதியும், கம்ருதினும் தள்ளினர். அதைப் பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சான்ட்ராவுக்கு நடைபெற்ற அநீதிக்கு…

சத்தான… சுவையான… குதிரைவாலி அடை தோசையை செய்வது எப்படின்னு தெரியுமா?

Posted by - January 6, 2024 0
தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவார்கள்.…

மீல் மேக்கரை வெச்சு இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புட்டு செய்யுங்க.. சும்மா அள்ளும்…

Posted by - September 15, 2023 0
உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா…

ஒரு கப் அரிசி மாவும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. ருசியா இருக்கும்…

Posted by - November 16, 2023 0
தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படி குளிர்ச்சியான காலநிலையில் குறிப்பாக மாலை வேளையில் பலருக்கும் காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிடத்…

எதிர்நீச்சல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல்கள் TRP- புதிய மாற்றம்.

Posted by - February 23, 2024 0
சீரியல்கள் வார இறுதிகளில் ரிலீஸ் ஆகும் படங்களை காண ஆர்வமாக இருப்பவர்களை தாண்டி தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *