பிரமாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய “எலி வளை” தொழிலாளர்கள்

249 0

உத்தர்காசி:

நிலக்கரி சுரங்கங்கள் போன்றவற்றில் சட்டவிரோதமாக சிறிய சுரங்கங்கள் அமைத்து, அவற்றின் மூலம் நிலக்கரி திருடுவது சிலரின் வழக்கம். சில அடிகள் முதல் பல அடிகள் வரை நீளும் இந்த குறுகிய, ஆபத்தான சுரங்கங்களில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழைய முடியும். இந்த சுரங்கங்கள் ‘எலி வளை சுரங்கங்கள்’ என்றும், அவ்வாறு சுரங்கம் தோண்டுவோர் ‘எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இது சட்டத்தை மீறிய செயல் என்பதால், பிடிபட்டால் சிறை நிச்சயம். அத்துடன் சமயங்களில் இந்த எலி வளை சுரங்கங்களில் திடீரென தண்ணீர் புகுவது, இடிந்து விழுவது போன்றவற்றால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டு பலியாகும் பரிதாபமும் நடக்கும்.பிரமாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய "எலி வளை" தொழிலாளர்கள் | uttarakhand  tunnel rescue rat hole miners

ஆனால் இந்த ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ தான் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இறுதிக்கட்ட மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர். இந்தப் பணியை மேற்கொள்ள இவர்கள்தான் சரியானவர்கள் என்று சுரங்கப்பாதை கட்டுமான பணியை மேற்கொண்ட நவயுகா என்ஜினீயரிங் நிறுவனம் முடிவு செய்தது.

அதையடுத்து டெல்லி, ஜான்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 12 ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ அழைத்துவரப்பட்டனர். அவர்கள் குழாய்களுக்கு சென்று, 10 மீட்டர் இடிபாடுகளுக்குள் 24 மணி நேரத்துக்குள் துளையை ஏற்படுத்திவிட்டனர். இது மீட்பு படையினர் எதிர்பார்த்ததையும் விடவும் மிகவும் குறைவான நேரம் ஆகும். அத்துடன் இந்த தொழிலாளர்கள் பயன்படுத்தியது மண்வெட்டி, சிறிய கருவிகள் போன்ற எளிய சாதனங்கள்தான்.

‘எலி வளை சுரங்கம் அமைப்பது சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களின் அனுபவமும், திறமையும்தான் கடைசியில் கைகொடுத்தன’ என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சையத் அடா ஹஸ்னைன் பாராட்டு தெரிவித்தார்

ஆக, சட்டவிரோத செயலை செய்பவர்களாக கருதப்படும் ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் மூலம் ஒரே நாளில் ‘ஹீரோக்கள்’ ஆகிவிட்டனர்.

Related Post

கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

Posted by - July 22, 2023 0
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா?

Posted by - July 27, 2023 0
மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை…

ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசினார்: மனைவி பிரிந்து சென்றதால் குழந்தைகளை விற்க முயன்ற வாலிபர்

Posted by - July 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - December 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *