எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா?

296 0

மும்பை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.Petrol And Diesel Price Chennai On 21st August 2022 | Petrol, Diesel Price  : விலையில் மாற்றம் உண்டா? பெட்ரோல், டீசலின் இன்றைய நிலவரம் இதுத

ஆனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன. இதனால் இந்நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022-23ம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது.

இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும். எண்ணெய் நிறுவனங்கள் 2 வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. அவை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகும். கச்சா எண்ணையின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணை நிறுவனங்களுடையது.

மேலும் கச்சா எண்ணையை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Post

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம் கருத்துக் கணிப்பில் தகவல்..!

Posted by - May 28, 2023 0
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை…

சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

Posted by - July 11, 2023 0
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம்…

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…
Gemini Generated Image 1zqyab1zqyab1zqy

பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல்

Posted by - March 19, 2026 0
பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.…

டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை

Posted by - June 7, 2023 0
புதுடெல்லி: டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. ஜாமியா நகரைச் சேர்ந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *