புதிய ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

213 0
  • சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா. இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார்.
    சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய மெகாத்தொடர் இனியா. சன் டிவியில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. இனியா இந்த தொடரில் கதையின் நாயகியான இனியா சுட்டிப் பெண். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர். அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே இலக்கு. அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள். ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய் தப்பெல்லாம் கூட பண்ணலாம் அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா. ஆனால், கதையின் நாயகன் விக்ரம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தவறையெல்லாம் கூட பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பவன். தப்பை சகித்துக் கொள்ள முடியாதவன். எதிரும் புதிருமாய் உள்ள நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும், யார் யாரை வெல்லப் போகிறார்கள், என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள மெகாத்தொடர் இனியா. இனியா இந்த தொடரில் இனியாவாக ஆலியா மானசா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ளார். சன் டிவியில் தொகுப்பாளராய் பணிபுரிந்த ரிஷி, விக்ரமாக நடிக்கிறார். மேலும், சந்தான பாரதி, பிரவினா, எல்.ராஜா, மான்ஸி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இனியா தொடரில் சரிகம நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளராக இருக்கும் பி.ஆர். விஜயலட்சுமி, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தான பாரதி, சங்கர் குரு பட இயக்குனர் எல். ராஜா, தொரட்டி பட இயக்குனர் மாரிமுத்து, இந்தத் தொடரை இயக்கும் நாராயணமூர்த்திய ஆகிய ஐந்து இயக்குனர்கள் இணைந்து பணியாற்றிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

Posted by - April 5, 2023 0
நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.…

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

Posted by - September 16, 2025 0
மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர் கர்ப்பிணி மனைவியை அரிவாளால் வெட்டிய கும்பல்! சென்னை அம்பத்தூர் அருகே மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர், அவரது கர்ப்பிணி…

டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் – தமிழக அரசின் முடிவும் நன்மைகளும்!

Posted by - August 17, 2023 0
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை தமிழ்நாடு முதல்வர்…

கோவில்:நாச்சியார்கோவில் அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்….

Posted by - June 5, 2024 0
திருவிழா: வைகாசி அமாவாசையைத் தொடர்ந்து நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மனுக்குப் பதிமூன்று நாட்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. தினம் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன்  அருளாசி வழங்குகிறாள். தல சிறப்பு:…

“ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” – அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை

Posted by - January 2, 2025 0
“பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.” மதுரை முக்குலத்தோர் இலவச…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *