“ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” – அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை

248 0

“பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.”

மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த 2023 – 24 மற்றும் 2024 – 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 421 முக்குலத்து மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. இதில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.

இந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மூர்த்தி, நிகழ்ச்சியில் சாதி ரீதியாக பேசினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், “ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள் என்பதை வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்.நாயக்கர்கள் காலகட்டத்தில் கொள்ளையடித்துச் செல்லும் பொழுது இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முன்களத்தில் நின்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இதேபோல்தான் உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிக்கொண்டு வரப்படாமல் பின் தங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது” என்று பேசினார்.தற்போது இவரின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Post

தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம்…? ஷாக்கில் பொதுமக்கள்..!

Posted by - June 6, 2023 0
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த…

உங்கள் BSNL 4G சிம் கார்டில் VoLTE சேவையை எவ்வாறு செயல்படுத்துவது? இதோ வழிமுறைகள்..

Posted by - December 3, 2024 0
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதாவது 4ஜி சேவை, 5ஜி சோதனை, லைவ் டிவி…

ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

Posted by - December 12, 2023 0
சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட…
image 4

எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்..

Posted by - March 7, 2026 0
கடந்த ஓராண்டாகவே மீனாட்சி, புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாசலில் வாகனம் நிறுத்துவது தொடங்கி, தெருவை கூட்டி சுத்தம் செய்து கோலம் போடுவது வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *