பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

220 0

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள் நட்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் தன் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருந்த போதும் வழக்கறிஞர் செந்தில்குமார் அந்தப் பெண்ணுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் இளங்கோவன், வழக்கறிஞரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி, திருப்பூர் பகுதியை சேர்ந்த தேவி என்ற பெண்ணின் மூலம் வழக்கறிஞர் செந்தில் குமாரை தொடர்பு கொண்டு என் வழக்கு ஒன்று நீங்கள் வாதாட வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனை நம்பிய வழக்கறிஞர் செந்தில் குமார் சேலம் வரும்படி கூறியுள்ளார். பின்னர் சேலம் வந்த அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு குரும்பபட்டி வன உயிரில் பூங்கா சென்றனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் கோரிமேடு பகுதியில் உள்ள பச்சியம்மன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளனர்.வழக்கறிஞர் செந்தில்குமார்

அப்போது அந்தப் பெண், தன் வழக்கு சம்பந்தமான டாகுமெண்டுகளை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும்படி கூறி கோரிமேடு அருகே உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்கனவே அவரை பின் தொடர்ந்து வந்த மதுரையை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அவரது கூட்டாளிகள் வழக்கறிஞரை குண்டு கட்டாக காரில் தூக்கி சரமாரியாக தாக்கியப்படியே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அப்போது அங்கிருந்த காவல்துறை வாகனம், அந்த கடத்தல் வாகனத்தை பின் தொடர்ந்து காரில் சிக்கிக் கொண்டிருந்த வழக்கறிஞர் செந்தில்குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்களில் காரில் இருந்த இளங்கோவன் மட்டுமே போலீஸ் பிடியில் சிக்கினார். மேலும் உடன் வந்த நபர்களும் அந்த பெண்ணும் அங்கிருந்து மாயமாகியுள்ளார். இது தொடர்பாக கன்னங்குறிச்சி காவல் நிலையம் மற்றும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Post

அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம்: தவறான சிகிச்சை என கணவர் குற்றச்சாட்டு

Posted by - September 28, 2023 0
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார்…

பாதியில் வெளிநடப்பு.. அவையில் சலசலப்பு.. கடந்தாண்டு ஆளுநர் உரையை மறக்க முடியுமா?

Posted by - February 12, 2024 0
தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே…

பொதுமக்களே கவனம்… அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்…

Posted by - September 26, 2023 0
சென்னை: நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:- செப்டம்பர் 30-ந்தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு…

திட்டமிட்ட தேதியில் முதுகலை ஆசிரியர் தேர்வு? டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - October 7, 2025 0
TN TRB Hall Ticket 2025 தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு குறித்த குறைகள் இருப்பின் அதைச் சரிசெய்யலாம். அதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *