பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

120 0

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும்.

பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - September 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

Posted by - April 11, 2026 0
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்று ஏதேனும் இருக்கிறதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்…

TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

Posted by - April 15, 2026 0
அடிப்படை காவலர்களுக்கான பணி ஊதியம் ரூ.18,200ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்தார். நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று திருப்பூரில்…

மனம் திறந்த ஓபிஎஸ்.பொறுமையாக இருந்தது ஏன்?

Posted by - February 24, 2026 0
ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக- ஓபிஎஸ். கட்சி விதியை…

“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ

Posted by - November 6, 2025 0
“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ பொது வாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத விஜய் ஆட்சிக்கு வந்ததைப்போலவேகனவுலகத்திலும் எப்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *