மத்திய அரசின் தயவில் ஆட்சி நடத்தும் திமுக அரசு… ஊழலில் திளைக்கும் தமிழக அமைச்சர்கள் ; அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு..!!

311 0

விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டம் மத்திய அரசின் திட்டத்தில் தான் தமிழக அரசு நடக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக முழுவதும் 122 மாவட்டங்களில் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் பாதயாத்திரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தாய்மார்கள், மகளிர்கள், இளைஞர்கள் என அனைவரும் சேர்ந்து தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது.பெண்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவும் அடுத்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தமிழகத்தில் உள்ளனர்.

திமுக கட்சிக்காரர்கள் பாஜகவை பார்த்து ஹிந்தியை திணிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், நம்முடைய பாரத பிரதமரோ, தமிழையும், திருக்குறளையும் தான் இந்தியா முழுவதும் திணித்து வருகிறார்.நேற்று நடைபெற்ற காசி தமிழ் சங்கத்தில் திருக்குறள் புத்தகத்தை 16 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மேலும், கடந்த ஆண்டு 13 மொழிகளில் மொழிபெயர்த்து மொத்தம் 29 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார். மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் கடந்த 9 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கி உள்ளார்.ஆனால், தமிழக அமைச்சர்களோ, நிதியில் ஊழல் செய்கிறார்கள். குறிப்பாக, இந்த விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளார்கள். அதில் அமைச்சர் மஸ்தான் அவர்கள் வந்த பிறகு கள்ளச்சாராயம் சாவு அதிகரித்துள்ளது. மேலும், அமைச்சர் பொன்முடி வந்த பிறகு மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, என குற்றம் சாட்டினார்.இந்நிகழ்வில் பாஜக மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Post

இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?

Posted by - March 5, 2025 0
இன்றை அனைத்துக் கட்சி கூட்டத்தில், தொகுதி மறுவரயறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அனைத்துக் கட்சி கூட்டம்: சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது…

‘பாரத் மாதா கி ஜே’ திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்… மேடையில் எல்.முருகன்!

Posted by - December 4, 2022 0
கும்பகோணம் அருகே மத்திய இணையமைச்சர் முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டிருக்கும் போது, பாஜகவின் கூச்சலிட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா…

ஏதாச்சு இருந்தா சொல்லுங்க, விஷாலுக்கு பதிலடி கொடுத்த மேயர்

Posted by - December 5, 2023 0
விஷால் மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு பெரும் பலத்துடனும் உற்சாகத்துடனும் இருந்து வருகிறார் நடிகர் விஷால். இவர் அடுத்து மாஸ் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற…

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல், கதறி அழுத பிரேமலதா.. புகைப்படங்கள் இதோ

Posted by - December 28, 2023 0
விஜயகாந்த் மரணம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் பாதிக்கப்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவமனையில் மரணமடைந்த நடிகர்…

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 22, 2024 0
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 22,931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *