மனைவி பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர்

213 0

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்துவந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இளம்பெண் பீரோவில் இருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார்.Teen jumps out of car 'to escape from kidnappers'

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்த னர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு பொள்ளாச்சி கொள்ளுபாளையத்தை சேர்ந்த ஏற்கனவே 2 முறை திருமணமான 27 வயது வாலிபருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வாலிபரின் 2-வது மனைவி பிரசவத்திற்கு அவரது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது வாலிபர் இளம்பெண்ணை அவரது வீட்டுக்கே அழைத்து சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. தற்போது 2 பேரும் மாயமாகி விட்டனர். 2 பெண்களை திருமணம் செய்த பிறகும் 3-வதாக ஒரு பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Post

நைட் பார்ட்டியில் கொக்கைன்.. சிக்கும் விஐபி நடிகர், நடிகைகள்.. வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி

Posted by - June 26, 2025 0
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் கைதானது போன்று பல விஐபி நடிகர்கள், நடிகைகள் சிக்குவார்கள் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில்…

போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யும் மத்திய மாநில ஆளும் கட்சிகள்.. பந்தயத்துக்கு நாங்க வரலாமா, TVKForTN

Posted by - February 22, 2025 0
சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும்  கெட் அவுட் மோடி என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது. திமுக கட்சியினருக்கு…

ஒரு வயது குழந்தைக்கு அரிய வகை நோய்: சிகிச்சை செலவுக்காக ரூ.17½ கோடி உதவியை நாடும் பெற்றோர்

Posted by - July 29, 2023 0
சென்னை: சென்னை சேலையூரில் வசித்து வருபவர் ஆகாஷ் மிஸ்ரா. ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கு ஒரு வயதில் சிவான்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை…

சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததது ஏன்? – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

Posted by - March 17, 2025 0
சட்டப்பேரவை தலைவர் திமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், நடுநிலை தவறிவிட்டதாகவும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். “அதிமுகவில்…

மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

Posted by - February 17, 2023 0
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *