முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டு செல்வதும்.. அதை மணமகன் குடிக்க சொல்வதற்கு என்ன காரணம் தெரியுமா..?

303 0

புதுமணப்பெண் கையில் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதையும், அங்கு மணமகனும், மணமகளும் அதை பகிர்ந்து அருந்துவதையும் நாம் தமிழ் திரையுலகின் பெரும்பாலான படங்களில் பார்த்திருப்போம். ஆனால் ஏன் என்று என்றாவது யோசித்ததுண்டா.? காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான அத்தியாயமாக திருமணம் அமைகிறது. அதிலும் ஹிந்துக்கள் நடத்துகின்ற திருமணங்களில் எண்ணற்ற சம்பிரதாயங்கள் உண்டு. திருமண நிகழ்வின்போது ஹிந்துக்கள் பல்வேறு விதமான மரபுகளையும், பாரம்பரியத்தையும் கடைப்பிடிக்கின்றனர். திருமணத்தின்போது மட்டுமல்ல, புதுமணத் தம்பதிகள் இணை சேருகின்ற முதல் இரவிலும் சடங்குகள் உண்டு.புதுமணப்பெண் கையில் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதையும், அங்கு மணமகனும், மணமகளும் அதை பகிர்ந்து அருந்துவதையும் நாம் தமிழ் திரையுலகின் பெரும்பாலான படங்களில் பார்த்திருப்போம். திருமணமான நபர்களுக்கு இதன் நேரடி அனுபவமும் இருக்கும்.பாலும், குங்குமப்பூவும் : புதுமணத் தம்பதிகள் அருந்தும் பாலில் குங்குமப்பூ சேர்த்து அருந்துவது வழக்கம். இதன் பின்னணியில் மரபு, சம்பிரதாயம் என்பதையெல்லாம் கடந்து ஆரோக்கியப் பலன்களும் கிடைக்கும். அதன் விவரங்களை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.இனிமையான திருமண வாழ்க்கை : இரு மனங்கள் இணைகின்றன என்பதைக் கடந்து, எண்ணற்ற சம்பிரதாயங்களின் ஊடாக இரு தரப்பு உறவுகளும் சங்கமிக்கின்றன. திருமண வாழ்க்கை இனிமையான பந்தமாக அமைகிறது என்பதற்கு அடையாளமாகவே இனிப்பு, குங்குமப்பூ சேர்த்த பால் வழங்கப்படுகிறது. பாலை பகிர்ந்து கொள்வதன் மூலமாக தம்பதியர்கள் தங்கள் அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தயாராகின்றனர் என்று அர்த்தம்.ஏன் பாலும், குங்கம்ப்பூவும் : பால் தூய்மையான உணவுப் பொருளாகவும், புனிதம் மிகுந்ததாகவும் பார்க்கப்படுகிறது. ஹிந்துக்களின் பெரும்பாலான விழாக்கள் மற்றும் சடங்குகளில் பால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே முதல் இரவிலும் பால் இடம்பெறுகின்றது. குங்குமப்பூ நல்ல மனமும், நிறமும் கொடுக்கும்.காமசூத்ரா : தாம்பத்ய வாழ்க்கை குறித்த குறிப்புகளைக் கொண்ட பாரம்பரிய நூலான காமசூத்ரா நூலில் முதலிரவின்போது பால் அருந்த வேண்டியதன் அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது. தேன், சர்க்கரை, மஞ்சள், மிளகுத் தூள், குங்குமப்பூ போன்றவற்றை கலந்து இதனை அருந்தலாம். குங்குமப்பூ சேர்த்து அருந்தினால் பாலியல் வேட்கை மற்றும் பலம் அதிகரிக்கும் என்று காமசூத்ரா குறிப்பிடுகிறது.ஆரோக்கிய பலன்கள் : குங்குமப்பூவில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் நம் எண்ண ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் ஸ்ட்ரெஸ் அளவுகளைக் குறைக்கும். தம்பதியர்களுக்கு வலுவூட்டும்.அன்யோன்யம் அதிகரிக்கும் : மணமகனும், மணமகளும் ஒரே கிளாஸ் பாலை பகிர்ந்து அருந்துகின்றனர். இது அவர்களுக்குள் புரிந்துணர்வு, அன்யோன்யம் போன்றவற்றை அதிகரிக்கிறது. புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்க இது அடிப்படையாக அமைகிறது.மூன்று நாட்களுக்கு : முதலிரவு தொடங்கி 3 நாட்கள் மணமக்களுக்கு இதுபோன்று பால் வழங்கப்படும் கலாச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது அவர்களுக்குள் காதலை மேலோங்கச் செய்கிறது.

Related Post

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி- தமன்னா போட்டோவிற்கு ரசிகர் கமெண்ட், அப்படி என்ன போட்டோ

Posted by - June 13, 2023 0
நடிகை தமன்னா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா படிக்காதவன், பையா, சிறுத்தை, அயன், சுறா, வீரம் என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து…

அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறிய டெல்னா டேவிஸ்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

Posted by - November 3, 2023 0
தற்போதைய காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களும் பாப்புலராக இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக…

சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி

Posted by - March 23, 2023 0
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். வாணி போஜன் 2022 -ம்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவா இது?- மேலாடை கழட்டி கிளாமர் போட்டோ ஷுட்

Posted by - February 20, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கும் மேலாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பமாக இருப்பதை மையமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *