முன்னாள் அமைச்சர் காலமானார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

213 0

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்  சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார்.  தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார்.

திமுக இலக்கிய அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான இந்திர குமாரி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.  சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் , சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவரின் கணவர் வழக்கறிஞராவார். இவருக்கு லேகா என்ற ஒரு மகள் உள்ளார். 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்  சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார்.  தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார்.

தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இந்திரகுமாரி 2006-ல் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு இலக்கிய அணி மாநிலத் தலைவர் பதவியை வழங்கி அழுகுபார்த்தது திமுக.

உடல்நலக்குறைவால் காலமான இந்திரகுமாரிக்கு, திமுக தலைவரும்,  முதலமைச்சருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், திமுகவின்  இலக்கிய அணி தலைவர் புலவர் இந்திர குமாரி மறைவு செய்தி தம்மை சோகத்தில் ஆழ்த்தியதாகவும், நெடிய அரசியல் அனுபவம் கொண்ட புலவர், மக்கள் பணியாற்றியாற்றியவர் என்றும் நினைவு கூர்ந்துள்ளார்.  புலவர் இந்திர குமாரியின் மறைவு திமுகவுக்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பு என்றும் முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். இதற்கிடையே சென்னை அடையாறு காந்திநகரில் வைக்கப்பட்டுள்ள புலவர் இந்திர குமாரியின் உடலுக்கு திமுக மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிச்சடங்குகள் பெசன்ட் நகரில் இன்று நடைபெற இருக்கின்றன.

Related Post

குழந்தையை பலாத்காரம் செய்து எரித்த வழக்கில் திருப்பம்! தஷ்வந்த் விடுதலை- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Posted by - October 8, 2025 0
தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து ,உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில், தஷ்வந்த் மரண…

பூலாங்கிழங்கின் மகிமை.. கமகம பூலாங்கிழங்கு பொடி எப்படி செய்யணும் தெரியுமா? வேற லெவல் வெள்ளை மஞ்சள்

Posted by - January 6, 2024 0
சென்னை: கிச்சிலி கிழங்கு அல்லது பூலாங்கிழங்கு அல்லது வெள்ளை மஞ்சள் அல்லது அம்பா மஞ்சள் என்று பல்வேறு பெயர்களை கொண்ட இந்த மூலிகையின் பயன்கள் என்னென்ன தெரியுமா?…

நீங்க கையால சாப்பிடுறதுக்கு பின்னாடி இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா? இனிமே ஸ்பூனை யூஸே பண்ணாதீங்க!

Posted by - November 3, 2023 0
இன்றைய நவநாகரீக உலகில், கைகளால் சாப்பிடுவது கெளவுரவ குறைச்சலாகவும், ஸ்பூன் மற்றும் முட்கரண்டியில் சாப்பிடுவது ஸ்டைலாகவும் நாகரீகமாகவும் கருத்தப்படுகிறது. உண்மையில், இவை நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

முருங்கை மரம்.. வேர் முதல் காய் வரை கொட்டிக்கிடக்கும் அதிசயம்.. ஆச்சரிய குச்சிகளும், அதிசய பூக்களும்

Posted by - December 21, 2023 0
சென்னை: முருங்கை என்றாலே பெண்களுக்கு அருமருந்தாகக்கூடிய கீரையாகும்.. முருங்கை ஈர்க்குகள் பெண்களுக்கு எப்படி உதவுகிறது தெரியுமா? முருங்கை விதைகளை வைத்து என்ன செய்யலாம்? பெண்களுக்கு 45 வயதாகிவிட்டாலே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *