கார் டாக்சியில் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் என்ற செய்திகள் வந்த நிலையில் பைக் டாக்ஸி இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால் தற்போதைய சம்பவத்திற்கு பிறகு அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு நகரமான பெங்களூருவில் பெண் ஒருவர் ராபிடோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோவில் இதுபோன்ற வழக்கு நடைபெறுவது இதுவே முதல் முறை ஆகும். ராபிடோ என்பது வாடகை கார் போன்று வாடகை பைக். முன்பதிவு செய்தால் பைக்கில் வந்து ட்ராப் செய்யும் முறையாகும். முக்கிய நகரங்களில் இந்த சர்வீஸ் உள்ளது. இந்நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கார் டாக்சியில் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் என்ற செய்திகள் வந்த நிலையில் பைக் டாக்ஸி இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால் தற்போதைய சம்பவத்திற்கு பிறகு அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.
கேரளவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரில் ரேபிடோ சவாரிக்கு முன்பதிவு செய்திருந்தார். ராபிடோவில் பயணிக்கும்போது நடுவில் நீலாத்ரி நகரில் நிறுத்தி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஒருவரால் அந்த பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இது குறித்து பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ ஒருங்கிணைப்பாளர் மற்றும் தளவாட சேவை வழங்குநர் இந்த சம்பவம் குறித்த தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்து வேலை பார்க்கும் ஒருவர் செய்த இந்த செயலை ரேபிடோ வன்மையாகக் கண்டிக்கிறது.மேலும் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு ஆளாக நேரிட்ட பாதிக்கப்பட்டவரிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்கிறோம். காவல்துறைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து, குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க எங்கள் தரப்பு உதவிகளை செய்வோம்.. இந்த வழக்கின் விசாரணையில் போலீஸாருக்கு Rapido தனது முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Rapido “வாடிக்கையாளர்கள் பாதுகாப்பே முதன்மை” என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பு பிரதானம் என்ற உண்மைக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.” என்று அறிவித்துள்ளது
இதற்கு முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி, பெங்களூருவில் ஒரு பெண், சவாரி செய்யும் போது, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஓட்டுனர் ஒருவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். அவர் மீது IPC பிரிவு 354A இன் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கை போலீசார் தொடங்கினர். ஆனால் அது போலி வழக்கு என்று தெரிய வந்து கைவிடப்பட்டது.
Related Post
இந்திய அளவில் “X” தளத்தில் டிரெண்டிங்: #TeachersProtest
“சம வேலைக்கு சம ஊதியம்” – 8 நாட்களாக சென்னை போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்** சென்னை:தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், “சம வேலைக்கு சம…
அசாமில் மார்க்கெட்டில் தீவிபத்து- 150 கடைகள் சேதம்
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால்…
கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள்…
மதுபோதையில் ஓட்டலில் இளம்பெண்களுடன் மாப்பிள்ளை நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்
திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28).…
மணிப்பூரில் பாதுகாப்பு வீரர்கள்- துப்பாக்கி ஏந்திய கும்பலுக்கு இடையே கடும் சண்டை
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (285)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

- ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

- “பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

- கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!
