மணிப்பூரில் பாதுகாப்பு வீரர்கள்- துப்பாக்கி ஏந்திய கும்பலுக்கு இடையே கடும் சண்டை

297 0

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அமைதி நிலவி வருவதாகவும், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை டெங்நவுபால் மாவட்டத்தில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், ஆயுதமேந்திய கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டை இன்னும் நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.Manipur violence: Curfew relaxed in five valley districts | மணிப்பூரில்  மீண்டும் ஊரடங்கு தளர்வு
இந்த சண்டையில் காயம் குறித்த எந்த தகவலும் வெளியாகவிலலை. சூழ்நிலையை கவனித்து வருவதாக பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள பௌகாக்சாயோவில் ராணுவ தடுப்புகளை அகற்ற ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த நிலையில் இன்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. மணிப்பூர் வன்முறை வெடித்தபோது, ராணுவ முகாமில் உள்ள ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றுதான் ஐந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

Related Post

உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு… உடனே Delete பண்ணுங்க

Posted by - December 31, 2024 0
SBI ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பெயரில் போலியாக உலாவும், வாட்ஸாப் லிங் கை தொட்டால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும்…
annamalai

‘சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 3-வது மொழியை கட்டாயம் ஆக்குவதா?’ – மத்திய அரசுக்கு அண்ணாமலை எதிர்ப்பு

Posted by - May 26, 2026 0
சென்னை: “சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டில் இருந்தே மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கியுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று…

புதிய ஜிஎஸ்டி வரியால் புது வீடு கட்டுவது சுலபம்.. சிமெண்ட் முதல் மார்பில் வரை! மொத்தமாக குறையும் விலை

Posted by - September 4, 2025 0
சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை 28% சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது வீடு வாங்குபவர்கள் மற்றும் வீட்டை கட்டுபவர்களுக்கு செலவினங்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது…

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?

Posted by - March 12, 2024 0
 தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம்…

10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்…

Posted by - June 19, 2025 0
ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *