கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

214 0

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள் ஜெபக்கூட்டம் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதன் கடைசி நாளான நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் எர்ணாகுளம், ஆலுவா, அங்கமாலி, எடப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2,300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டு மையத்தில் காலை 9.45 மணி அளவில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அரங்கின் மையப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் மொத்த அரங்கமே அதிர்ந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். பெண்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினர். உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு வெளியே ஓடியதால் அரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கே பெரும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது.

இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அடுத்த சில வினாடிகளிலேயே அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால் 2 இடங்களில் தீ பிடித்தது. இதில் அங்கு போடப்பட்டு இருந்த இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் பற்றி எரிந்தன. குண்டு வெடிப்பில் சிக்கியும், தீயில் சிக்கியும் பலர் படுகாயம் அடைந்தனர். ஆடைகளில் தீ பிடித்து எரிந்ததால் மக்கள் தரையில் படுத்து உருண்டனர். அதேநேரம் சிலரது உடலில் தீ பற்றிக்கொண்டதால் அணைக்க முடியாமல் திணறினர். இதைப்பார்த்த சிலர் அவர்களை மீட்க போராடினர்.

அடுத்தடுத்து வெடித்த இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி லிபினா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மேலும் 51 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்த குமாரி (வயது 53) என்ற பெண் பின்னர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக களமச்சேரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் ஒரு குழந்தை உள்பட 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் 95 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.


Related Post

ஜியோ உடன் இணைந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

Posted by - February 14, 2025 0
முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த வருடமே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு…

தினசரி பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டியது: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,076 ஆக உயர்வு

Posted by - March 8, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. பாதிப்பு கடந்த 5-ந்தேதி 324 ஆக…

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000

Posted by - February 24, 2025 0
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது…

தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய பிரச்சினையாகிடும்

Posted by - December 15, 2023 0
டெல்லி: உடல் எடையைக் குறைக்க முயல்வோர் நிச்சயம் சில வகை உணவுகளை ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *