லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

204 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரும் சிறுமியும் காதலித்து வந்தனர். அப்போது லோகேஷ் சிறுமியிடம் எங்காவது வெளியில் சென்று வரலாம் என தெரிவித்தார். இதையடுத்து மாணவி கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினார்.

அவர் வகுப்புக்கு செல்லாமல் பள்ளி சுற்று சுவர் அருகே தனது புத்தகப் பையை வைத்துவிட்டு சென்றார். பின்னர் விஜயவாடா மச்சிளிப்பட்டினம் நெடுஞ்சாலைக்குச் சென்று லோகேஷ்-க்கு போன் செய்தார். காரில் வந்த லோகேஷ் மாணவியை ஏற்றிக்கொண்டு உய்யூரில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார்.ஆந்திராவில் அதிர்ச்சி: 2 நாட்களில் 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை | 9 Andhra  School Students Die By Suicide In 48 Hours - hindutamil.in

அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்தார். பின்னர் தனது நண்பர் நரேந்திரனுக்கு போன் செய்து லாட்ஜிக்கு வரவழைத்தார். அப்போது வாலிபர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக சிறுமியை பலாத்காரம் செய்தனர். இதனால் மாணவி மயக்கமடைந்தார். அவருக்கு தண்ணீர் தெளித்து சுயநினைவு வரவழைத்தனர்.

பின்னர் மாணவியை இரவு வீட்டின் அருகே இறக்கி விட்டனர். காதலன் மற்றும் அவரது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி மனமுடைந்தார். அவர் வீட்டுக்கு செல்லாமல் அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். இந்த நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் அருகே மாணவியின் புத்தகப்பை இருப்பதைக் கண்ட காவலாளி இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

மாணவியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர். மாணவியை லோகேஷ் காரில் ஏற்றி சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்தனர். மறுநாள் காலை கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் மாணவி பிணமாக மிதந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் லோகேஷ் மற்றும் நரேந்திரனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Related Post

அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Posted by - November 21, 2025 0
அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் நவம்பர் 23 ஆம்…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில்…

பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல்

Posted by - March 19, 2026 0
பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.…

பஞ்சாபில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.22½ லட்சம் கொள்ளை

Posted by - February 17, 2023 0
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியில்…

டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Posted by - December 6, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “மகாபரிநிர்வான் திவாஸ் அன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *