வர்த்தக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது- ரூ.1945-க்கு விற்பனை

288 0

சென்னை:

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலை மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த 3 மாதமாக சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₨96 குறைந்து ₨2,045க்கு  விற்பனை | Low Commercial Cylinder Prices...

14 கிலோ சமையல் சிலிண்டர் விலை ரூ.1118.50-க்கு விற்கப்படுகிறது. ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துகின்ற சமையல் சிலிண்டருக்கு ரூ.1200 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. கடந்த மாதங்களில் பிற மாநிலங்களில் நடந்த தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஒரே அளவில் உள்ளது.

ஆனால் டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை 2 மாதமாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ.1937-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.1945 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் பெரும்பாலும் ஓட்டல், டீக்கடைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

சிறு, சிறு தொழில் செய்வோர், சாலையோரம் கடை நடத்துபவர்கள் வணிக சிலிண்டர் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று உயர்ந்து இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தொழில் செய்வோர் கருதுகிறார்கள்.

Related Post

சனாதனம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

Posted by - September 7, 2023 0
சென்னை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

Posted by - January 22, 2025 0
பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள். என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும் என நாம்…

ஆதார் போன்று ’மக்கள் ஐடி’ உருவாக்க தமிழக அரசு திட்டம்..!

Posted by - December 28, 2022 0
Makkal ID: ஆதார் போல தமிழக மக்களுக்கு தனி ஐடி உருவாக்க தமிழ்நாடு மின் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆதார் எண் போன்று மக்கள் ஐடியை…

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை- காலை 7 மணி வரை நீடிக்கும் என தகவல்

Posted by - August 29, 2023 0
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி

Posted by - July 24, 2023 0
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *