வலுவிழந்த மாண்டஸ் புயல்… கரையை கடக்கும் போது சீறுமா..?

287 0

Cyclone Mandous | வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து உள்ளது.

மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 13 கி.மீ நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பகுதியில் மாமல்லபுரத்தில் ஒட்டி கரையை கடக்க கூடும்.

இதன் காரணமாக வட கடலோர பகுதியில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ வரை காற்றுவீசும். மாலை நேரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து 80 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம். தென் தமிழக பகுதியில் அதிகபட்சமாக 60 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்.

மாண்டஸ் புயல் வலுவிழந்த நிலையில் கரையை கடக்கும் போது வேகம் எடுக்குமா? அல்லது மேலும் வலுவிழந்து கரையை கடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் புயலின் தன்மையை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருப்பதாகவும் தற்போதைய நிலவரப்படி புயலாகவே மாண்டஸ் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புயல் அருகில் வரும் போது தான் அதில் ஏற்படும் மாற்றம் குறித்து தெரிவிக்க முடியும் என்று தென் மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் மாண்டஸ் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மின கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தருமபரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது.

Related Post

திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

Posted by - March 13, 2025 0
திமுக தலைமயிலான தற்போதைய தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். தமிழ்நாடு அரசு பட்ஜெட்: மத்திய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து, தமிழ்நாடு…

கோவை பீளமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்றது யார்?- 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

Posted by - July 29, 2023 0
கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருக்கு ஜெகதீஷ்வரி (40) என்ற மனைவியும், கார்த்திகா(16) என்ற…

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - December 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…

வங்காளதேசம் அருகே மிதிலி புயல் கரையைக் கடந்தது: வானிலை மையம் தகவல்

Posted by - November 18, 2023 0
சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

உங்க வயித்துல ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப அது ஆபத்தான வயிற்று புற்றுநோயா இருக்கலாமாம்..!

Posted by - November 10, 2023 0
வயிற்று உப்புசம் மற்றும் வீக்கம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சனை. ஆனால், சில நேரங்களில் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றுப் புற்றுநோய், இரைப்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *