வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை- மணல் புயல் தாக்கி புதையுண்ட கிராமம் மறுசீரமைப்பு

212 0

சார்ஜா:

சார்ஜா வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக பேசுவது வழக்கம். வானொலி நிகழ்ச்சியில் நேற்று ஆட்சியாளர் பங்கேற்று பேசும்போது, பொதுமக்கள் ஒருவர் சார்ஜாவின் மதாம் அருகில் நாங்கள் வாழ்ந்த குரைபா கிராமத்தை மறுசீரமைத்து கொடுக்க வேண்டும். அந்த கிராமம் மணல் புயல் தாக்கி புதையுண்ட பகுதியாக காட்சியளிக்கிறது.வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை- மணல் புயல் தாக்கி புதையுண்ட  கிராமம் மறுசீரமைப்பு | Public demand in radio program Restoration village  buried by sand storm

அதனை மறுசீரமைத்து கொடுத்தால் மீண்டும் அந்த பகுதியில் எங்களது வாழ்க்கை தொடர உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை தொடர்ந்து ஆட்சியாளர் அந்த புதையுண்ட கிராமத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து கிராமப் பகுதியில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ஜாவின் புதையுண்ட கிராமம் குறித்த விவரம் வருமாறு:- சார்ஜாவில் கடந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி பழம்பெருமை வாய்ந்த பகுதியில் ஆச்சர்யங்களும், மர்மங்களும் இருப்பது இயல்பாகவே உள்ளது.

துபாயில் இருந்து 60 கி.மீ மற்றும் சார்ஜாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது அல் மதாம் என்ற பாலைவன பகுதி. இங்கு இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளதுதான் குரபா கிராமம். ஒரு காலத்தில் அழகிய கிராமமாக விளங்கிய இந்த பகுதியில் தற்போது மனித நடமாட்டமே இல்லை என்பதுதான் மர்மமுடிச்சாக உள்ளது. ஏனென்றால் தற்போது இந்த முழு கிராமமே மணலில் புதையுண்டு கிடக்கிறது. மணலில் புதையுண்ட கட்டிடங்களின் மேற்கூரை மட்டுமே தெரிகிறது.

கடந்த 1970-ம் ஆண்டு மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தின் கட்டிடங்கள் அரசால் கட்டி தரப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே அந்த கிராம மக்களின் வாழ்க்கை நிம்மதியாக இருந்துள்ளது. அதன் பிறகு அந்த பகுதியில் தொடர்ந்து மணல் புயல் வீச தொடங்கியது. பிறகு வெள்ளம் வருவது போல் வீடுகளில், கட்டிடங்களில் மணல் புயல் தாக்கியது. இதனால் அந்த கிராமம் முழுவதும் மணலில் புதையுண்டது.

அந்த கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அந்த ஊரை விட்டு காலி செய்துவிட்டனர். இன்று அந்த பகுதிக்கு சென்றால் மணலில் மூழ்கிய வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்க்கலாம். மேலும் அன்று வாழ்ந்த மக்கள் விட்டு சென்ற பொருட்களும் அப்படியே சேதமடைந்து உள்ளது.

தற்போது இந்த பகுதி சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிபார்க்கும் இடமாக மாறியுள்ளது. பகலில் இந்த பகுதிக்கு வாகனங்களில் செல்வோர் இரவில் செல்வதில்லை. இப்படி மர்மம் நிறைந்த கிராமமாக இருந்த இந்த பகுதிக்கு தற்போது ஆட்சியாளரின் உத்தரவு மூலம் புதுவாழ்வு கிடைத்துள்ளது.

Related Post

படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன்.. கடுப்பான காதலி.. கத்திக்குத்தில் முடிந்த பிரேக் அப் பார்ட்டி.!

Posted by - January 21, 2023 0
படுக்கையிலேயே சிறுநீர் கழித்த ஆத்திரத்தில் இளைஞரை அவரது காதலி கத்தியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசிப்பவர்…

உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Posted by - September 20, 2023 0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது…

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

Posted by - March 12, 2025 0
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போர் நிறுத்தம்…

Hero Splendor Electric: இந்தியாவின் நம்பர் ஒன் பைக்.. ஸ்ப்ளெண்டரை மின்சார எடிஷனில் களமிறக்கும் ஹீரோ – 180KM ரேஞ்ச்

Posted by - September 16, 2025 0
Hero Splendor Electric: இந்திய பைக் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்ப்ளெண்டர் மாடலை, மின்சார எடிஷனில் அறிமுகப்படுத்த ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Hero Splendor…

எல்லைப் பகுதியில் பதற்றம் : இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீனா எடுத்த முக்கிய முடிவு..!

Posted by - December 27, 2022 0
இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *