”வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் வேணும்” – உதயநிதியை சந்திக்க வந்த விஜய் பட தயாரிப்பாளர்!

206 0

Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார்.

வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார். 

விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன.  இதில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்,  அதேபோல் துணிவு திரைப்படத்தை பாலிவுட்டை சேர்ந்த போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினும், வாரிசு திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரும் வெளியிடுகின்றனர்.  இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவிலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தெலுங்கு மீடியாவிற்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் முன்னணியில் உள்ளார். இது வியாபாரம், இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்குகள் என்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து பேச சென்னை செல்கிறேன் என்று பேட்டியளித்து இருந்தார்.அதன்படி நேற்று அவர் சென்னை வந்துள்ளார், காலை முதல் அவர் சென்னையில் உள்ளார்.  மேலும் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அவர் நேரம் கேட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Post

தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு..!

Posted by - May 16, 2024 0
தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் பட இசை வெளியீட்டு விழா, காத்திருக்கும் பிரம்மாண்டம்.. நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக…

பாரதிராஜாவால் ரிஜக்ட் செய்யப்பட்டு பெரிய ஆளான நட்சத்திரங்கள்..இத்தனை நடிகர்களா?!

Posted by - June 1, 2023 0
இயக்குனர் பாரதிராஜா, பாலச்சந்தர் போன்றோரை தமிழ் சினிமாவின் முக்கிய தூண்கள் என கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பலரை அறிமுகம் செய்தவர்கள் இவர்கள் இருவரும்.  …

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

விடாமுயற்சி: அஜித் குமாருடன் பிரச்சனை? படத்திலிருந்து விலகுகிறதா லைகா புரொடக்ஷன்ஸ்!

Posted by - August 24, 2023 0
துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித்குமாரின் அடுத்த படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு திரைக்கதை…

”கண்ணை நம்பாதே” திரை பார்வை..

Posted by - March 18, 2023 0
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மு. மாறன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. திரில்லர் கதைக்களத்தில் உதயநிதி எப்படி நடித்துள்ளார் என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *