விஜய்யின் சாதனையை முறியடித்த ஸ்டைலிஸ் ஸ்டார்.. விஜய் 69 படம் புதிய வரலாறு படைக்குமா?

160 0

தமிழ் சினிமாவில் விஜய் படங்களுக்குத்தான் அதிக மாஸ் உள்ளது. அவர் நடிக்கும் படங்களின் புதிய அப்டேட்டுகள், பாடல்கள், கிளிம்ஸ் வீடியோ இதெல்லாம் வெளியாகும் போது சமூக வலைதளங்களில் குறிப்பாக யூடியூப்பில் குறைந்த நேரத்திலேயே அதிக வியூஸ், அதிக பார்வைகள், படம் வெளியாகும் நாளில் அதிக வசூல் இவையெல்லாம் மற்ற நடிகர்களைக் காட்டிலும் அவரது படங்களுக்குத்தான் முதலிடம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக இருப்பவரும் விஜய்தான் என சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனே ஒருமுறை கூறியிருக்கிறார். தமிழ் நாட்டைத் தாண்டி, பெங்களூர், கேரளாவில் விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், பான் இந்தியா ஸ்டாராக விஜய்யால் இன்னும் ஒரு பெரியளவில் ஹிட் கொடுத்து ரூ.1000 கோடி வசூல் குவிக்கமுடியவிலை என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தவெக கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலில் குதிக்க விருக்கும் விஜய் கடைசியாக நடித்து வரும் விஜய்69. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இதுவரை 68 படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்த அவர் தன் உச்ச கட்ச கேரியரில் சினிமாவில் இருந்து விலகவுள்ளார். இந்த நிலையில் விஜய் 69 படமாவது பான் இந்தியா படமாக வெற்றி பெற்று அவரது கேரியரில் ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் படமாக அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விஜய்யின் சாதனையை முறியடித்த அல்லு அர்ஜூன்!

இந்த நிலையில், கன்னட நடிகர் யாஷ், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன் ஆகியோர் தங்களின் டீசர் டிரைலர்களில் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 பட டிரைலர் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையைப் படைத்துள்ளது. அனைத்து மொழிகளிலும் இந்த டிரெயிலருக்கு வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே தென்னிந்திய மொழிகளில் ஒரே நாளில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற டிரெயிலராக அல்லு அர்ஜூனின் புஷ்பா -2 பட ட்ரெயிலர் 44 மில்லியன் வியூஸை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முன் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் பட டிரைலர் 24 மணி நேரத்தில் 37 மில்லியன் வியூஸ் பெற்றிருந்தது.இதை முறியடித்து புஷ்பா 2 முதலிடம் பிடித்துள்ளது. பிரபாஸின் சலார் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் வியூஸ் பெற்று 3 வது இடத்திலும், விஜயின் லியோ பட டிரெயிலர் 24 மணி நேரத்தில் 29 மில்லியன் வியூஸ் பெற்று 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே புஷ்பா 2 பட சாதனையை விஜய் 69 பட டிரைலர் முறியடிக்குமா என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். நிச்சயம் இப்படம் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என கூறி வருகின்றனர்.

Related Post

குஷ்புவிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் – எதற்க்கு தெரியுமா..?

Posted by - July 20, 2024 0
திரைப்படத்தில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாக சூழலால் கோபமாக இருந்த நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும்…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 18, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…

அதிகாரத்தை கையில் எடுத்த சேட்டன்.. வேட்டையனில் கைத்தட்டலை அள்ளும் 6 ஹைலைட் காட்சிகள்

Posted by - October 10, 2024 0
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்துள்ளார்.…

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.

Posted by - November 30, 2022 0
விஜய் டிவி பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள். சீரியல் என்றாலே சன்…

54 வயதாகும் எஸ்.ஜே. சூர்யாவின் திருமணம் எப்போது.. அவரே கூறிய பதில், இதோ

Posted by - June 7, 2023 0
எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக பொம்மை திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் கேம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *