பழக்கவழக்கம் சரியில்லை… மீன் வெட்டும் கத்தி… தஞ்சை ஆசிரியை கொலையில் பகீர் பின்னணி!

182 0

அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறி, இளைஞர் ஒருவர் கொலை செய்த கொடூரத்தின் பகீர் பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி. 26 வயதான இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்காலிக தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ரமணியும் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான மதன்குமாரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மதன்குமார் பத்தாம் வகுப்பு படித்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது தங்கை திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பிய நிலையில், தற்போது மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரை சந்தித்துப் பெண் கேட்டுள்ளனர். அப்போது ரமணியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த ஒரு மாதமாக ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளனர். ரமணியும் மதன்குமாரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். ரமணியின் உறவினர் ஒருவர், மதன்குமாரின் பழக்கவழக்கம் சரியில்லை என ரமணியின் பெற்றோரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரமணியிடம், மதன்குமார் நேற்று முன் தினம் மாலை திருமணம் தொடர்பாகப் பேசியுள்ளார். அப்போது ரமணி, மதன்குமாரைத் திட்டி விட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் நேற்று காலை ரமணி பணிபுரியும் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு ஆசிரியர்கள் ஓய்வறையில் இருந்த ரமணியிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறித் தகராறு செய்துள்ளார்.

அப்போது மதன்குமார் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியால் ரமணியின் கழுத்தில் குத்தி விட்டுத் தப்பியோட முயன்றார். அவரை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே ஆசிரியை ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த பள்ளியில் டிஐஜி ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.ஏற்கனவே தெரிந்த நபர் என்பதால் யாரையும் கேட்காமல் நேராக ஓய்வறைக்குச் சென்ற மதன், ஆசிரியையைக் கொன்றதாக ஜியாவுல் ஹக் தெரிவித்தார். மதன் பள்ளிக்கு வந்தபோது காவலாளி இல்லை எனவும் ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.

Related Post

மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு: 4 மாவட்டங்களுக்கு மின்வாரியம் புதிய அறிவிப்பு

Posted by - December 14, 2023 0
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக…

குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் அதிமுகவினர் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

Posted by - October 17, 2024 0
நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை என அமைச்சர் சேகர்…

விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

Posted by - August 23, 2024 0
விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.நடிகர் விஜய் தனது அரசியல்…

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை – திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்!

Posted by - October 12, 2024 0
ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில்…

மூன்றுவகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுகின்றன… அமைச்சர் மா.சுப்ரமணியன்

Posted by - March 14, 2023 0
தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் H1N1 இன்புளுயன்சா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சல் பற்றிய அச்சம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *