விடுதலை 2 திரைபார்வை..

299 0

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இருக்கும். சமூக அக்கறை மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை அழுத்தமாக பேசி வருகிறார் வெற்றிமாறன்.

விடுதலை இரண்டாம் பாகம்

வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறார். கவுதம் மேனன் இதை மேல் அதிகாரிகளிடம் கூற, அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர்.

விசாரணை நடந்து வரும் நிலையில், தமிழக தலைமை செயலாளர் இருக்கும் ராஜீவ் மேனன் உத்தரவின்படி, விஜய் சேதுபதியை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். விஜய் சேதுபதியை அழைத்து செல்லும் ஜீப் டிரைவராக சூரி இருக்கிறார். இந்த பயணத்தில் ஒரு கட்டத்தில் காட்டுக்குள் இவர்கள் சிக்கிக்கொள்ள எந்த பக்கம் போவது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் வாத்தியார் விஜய் சேதுபதி, தன்னுடைய முன் கதையை சொல்ல துவங்குகிறார். தனது கிராமத்து எதிராக, தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் கொடுமை, இனி அடுத்த தலைமுறைக்கு நடக்க கூடாது என்பதற்காக, கருப்பன் (கென் கருணாஸ்) ஒரு கொலை செய்கிறார்.இதை அறிந்த விஜய் சேதுபதி, அவரை பண்ணை வீட்டாளர்களிடம் இருந்தும், போலீசிடம் இருந்து காப்பாற்ற, ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார். கருப்பனுக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது என போலீஸ் சொல்ல, அவரை போலீசில் சரணடைய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், போலீஸ் துரோகம் செய்ய, கருப்பன் மற்றும் அவரது மனைவியை பண்ணை வீட்டாளர்கள் கொலை செய்கிறார்கள்.

இதில் விஜய் சேதுபதிக்கு உயிர் போகும் நிலைமை ஏற்படுகிறது. விஜய் சேதுபதியை கம்யூனிஸ்ட்டான கிஷோர் காப்பாற்றுகிறார். இதன்பின் கிஷோர் உடன் இணைந்து மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்கிறார் விஜய் சேதுபதி. ஒடுக்குமுறை, தீண்டாமை என, இதுபோல் பல விஷயங்களை வைத்து மக்களை அடிமைப்படுத்தி வருபவர்களுக்கு எதிராக போராடும் விஜய் சேதுபதி, அதே சிந்தனையை கொண்டுள்ள மஞ்சு வாரியரை சந்தித்து, காதலிக்கவும் துவங்குகிறார். இருவருக்கும் திருமணமும் நடக்கிறது.

தனக்கு உயிர் கொடுத்த கிஷோரை தனது உயிராக விஜய் சேதுபதி பார்க்கிறார். ஒரு கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வன்முறையாலும் தட்டிக் கேட்கலாம் என முடிவு செய்யும் விஜய் சேதுபதி, கிஷோரிடம் இருந்து வெளியேறுகிறார். விஜய் சேதுபதி வெளியேறிய சமயத்தில், கிஷோர் கொலை செய்யப்படுகிறார். தனது உயிரை நினைத்த ஒருவரை கொலை செய்தவர்களை பழி வாங்குகிறார் விஜய் சேதுபதி.

தனது கதையை சொல்லி முடித்த விஜய் சேதுபதி, பாலத்திற்கு வெடி வைத்தது எப்படி, அதனால் பல மக்களின் உயிர்களை போக காரணம் யார் என்பதையும் போலீசிடம் கூற, வாத்தியார் மீது உள்ள போலீசின் பார்வை மாறுகிறது. இந்த சமயத்தில் விஜய் சேதுபதியை காப்பாற்ற அவருடன் தோழர்கள் அங்கு வந்துவிடுகிறார்கள். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

இயக்குனர் வெற்றிமாறன் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் சிறப்பாக செதுக்கியுள்ளார். முதல் பாகத்தில் இடையிலேயே சென்ற தமிழ் என்கிற கதாபாத்திரம், இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுத்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தது திரைக்கதையின் திருப்புமுனை.

முதல் பாகத்தில் இந்த கதையை சூரி சுமந்து சென்ற நிலையில், இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துடன் பயணிக்க வைக்கிறார் வெற்றிமாறன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அதிகாரம் என்னென்னவெல்லாம் செய்யும், தனக்கு அதிகாரம் கிடைக்கும் போது ஒரு மனிதம் எப்படி மாறுவான் என்பதை அழகாக காட்டியுள்ளார்.

போலீஸ் அதிகாரத்தின் கட்டளைக்கு கீழ் வேலை செய்கிறார்களா? அல்லது மக்களுக்காக வேலை செய்கிறார்களா என கேள்வி எழுந்த நிலையில், சூரி கதாபாத்திரம் எடுத்த முடிவு அருமையாக இருந்தது. கென் கருணாஸ் சில நிமிடங்கள் படத்தில் வந்தாலும் கூட, வாத்தியாரின் பாதைக்கு கென் கருணாஸின் வாழ்க்கை துவக்க புள்ளியாக அமைகிறது.

அதே போல் விஜய் சேதுபதியை வழிநடத்திய கிஷோர், மனைவியாக தோளோடு தோள் நின்ற மஞ்சு வாரியர், உடனிருந்த டி.ஏ, தத்துவத்தை பின்பற்றிய தோழர்கள் என திரைக்கதையில் புரட்சியின் வெளிப்பாடாக இருந்தது. ஆனால், விஜய் சேதுபதியின் பிளாஷ் பேக் போஷனின் சில குழப்பங்கள். அதை புரியும்படி எடுத்திருக்கலாம். மற்றபடி அனைவரும் திரைக்கதையுடன் ஒன்றி போகிறார்கள்.

திரைக்கதை, வசனம், இயக்கம் என வெற்றிமாறன் அசத்தியுள்ளார். மக்களுக்காக போராடிய, ஆனால் மக்களுக்கே தெரியாமல் உயிர் நீத்த தலைவர்களை பற்றி விடுதலை 2 படத்தில், இயக்குனர் வெற்றிமாறன் அழுத்தமான கருத்தை பதிவு செய்துள்ளார். அது மிகப்பெரிய தாக்கத்தை படம் பார்த்து முடித்தவுடன் ஏற்படுத்துகிறது.

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பலம். வேல்ராஜ் ஒளிப்பதிவு வேற லெவல். எடிட்டிங் சிறப்பு. ஆனால் டப்பிங் சில இடங்களில் சொதப்பிவிட்டது. கதாபாத்திரங்கள் லிப் சின்க், வசனங்களுடன் சில இடங்களில் ஒத்துப்போகவில்லை.

பிளஸ் பாயிண்ட்

வெற்றிமாறன் இயக்கம், வசனங்கள்

நடிகர்கள், நடிகைகள் நடிப்பு

பின்னணி இசை, பாடல்கள்

ஒளிப்பதிவு

அழுத்தமான கருத்துக்கள்

மைனஸ் பாயிண்ட்

இடைவேளைக்கு பின் திரைக்கதையில் ஏற்பட்ட சில குழப்பங்கள்

மொத்ததில், மக்களுக்காக போராடிய தலைவர்களின் வலியையும், அவர்களின் தத்துவத்தையும் பேசியுள்ள வெற்றிமாறனின் விடுதலை 2 படம், அவருடைய மகுடத்தில் சூட்டப்பட்டுள்ள மற்றொரு வாகை மலர்.

Related Post

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?

Posted by - November 4, 2025 0
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை…

மெஹந்தி அலங்கார தொழில்…சிறிய முதலீடு…அதிகப்படியான இலாபம்…!

Posted by - December 20, 2024 0
தற்போதெல்லாம் குடும்ப விழா சகிதங்களில் ’மெஹந்தி அலங்கார விழா’ என்றே தனியாக ஒரு விழா எடுக்கப்படுகிறது, அது போக மணப்பெண்களும் அன்றைய காலக்கட்டத்தில் மருதாணி வைக்க ஆசைப்பட்டவர்கள்,…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

Dengue Fever | அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Posted by - October 8, 2025 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. டெங்கு…

கரு உருவாக்கும் கருவளர்ச்சேரி ..

Posted by - September 21, 2023 0
ஒரு பெண் கருவை சுமப்பதற்கு ஆதாரமாக திகழும் மூலத்தலமாக கரு வளர்ச்சேரி திகழ்கிறது கருவளர்ச்சேரிக்கு வரும்போது திருமணம் ஆன பெண்கள் தனியாக வருவதை தவிர்த்து கணவனுடன் வர…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *