வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்

227 0

சென்னை:

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா?

புரோட்டீன், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் C, B1, B2, B6, B9 சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் போல சிறந்த உணவு வேறில்லை..

எதிர்ப்பு சக்திகள்:

எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த காயை, உடல் எடை குறைப்போரும் பயன்படுத்தலாம். காரணம், 100 கிராம் வெண்டைக்காயில், வெறும் 35 கிலோ கலோரிகள் இருக்கிறதாம்..

ஞாபக ரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு வயிற்றுப்புண், பார்வை குறைபாடு இன்னும் ஏகப்பட்ட நோய்களை இந்த வெண்டைக்காய் தீர்க்கிறது.

வழவழ காய்:

வெண்டைக்காயின் ஸ்பெஷாலிட்டியே அதன் வழவழப்புத்தன்மைதான்.. ஆனால், பலருக்கும் அந்த வழவழப்பு பிடிப்பதில்லை. அந்த வழவழப்பு இருப்பதாலேயே நிறைய பேர் வெண்டைக்காயை தவிர்த்து விடுவார்கள். சிலர் அந்த வழவழப்பு போகும்வரை வெறும் வாணலில் வதக்கிவிட்டு, அதற்கு பிறகு சமையலுக்கு வெண்டைக்காயை பயன்படுத்துவார்கள்.

உண்மையை சொல்லப்போனால், அந்த வழவழப்புத்தன்மையில்தான், வெண்டைக்காயின் மொத்த மருத்துவ பலன்களும் மறைந்திருக்கிறதாம்.. முக்கியமாக, நார்ச்சத்து இந்த வழவழப்பில்தான் உள்ளது.. அல்சர், வயிற்றுப்புண் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த வழவழ நார்ச்சத்து மருந்தாக உதவுகிறது..

மலச்சிக்கல்:

வெண்டைக்காயிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்கு காரணமாக உள்ளது. பெக்டின் + கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு, பித்த நீர் அதிகரிக்காமல் தடுக்கச் செய்துவிடுகிறது. அத்துடன், மலச்சிக்கல் பிரச்சனையையும், வயிறு உபாதைகளையும் இந்த வழவழ வெண்டைக்காய்தான் போக்குகிறது. அளவுக்கு அதிகமான ஆண்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள வெண்டைக்காயில், கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம்..

இந்த நார்ச்சத்துக்கள்தான் கொலஸ்ட்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாய நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றன.. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் C, ஆஸ்துமாவை விரட்டக்கூடியது.. வெண்டைக்காயிலுள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கக்கூடியது.. இந்த ஃபோலிக் அமிலம்தான், கர்ப்பிணிகளுக்கு மிகவும் தேவையான சத்துக்களாகும்.

நோயாளிகள்:

ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காயை நறுக்கி சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்த தண்ணீரை குடித்து வந்தால், நீரிழப்பு தடுக்கப்படுவதுடன், உடல் குளுமை பெறும்… எலும்பு நோய் வராது..

எலும்புகளின் அடர்த்தியும் அதிகமாகும். அதேசமயம், வெண்டைக்காயில் ஆக்சலேட் நிறைய உள்ளதால், சிறுநீரகம், பித்தப்பை கற்களை வளர செய்துவிடும். அதனால், எவ்வளவு நன்மைகளை தந்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கெடுதிதான்.. அதேபோல, அதிகமாக வெண்டைக்காயை வதக்க கூடாதாம்.. அப்படி வதக்கினால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிவிடுமாம்.

Related Post

மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?

Posted by - January 8, 2025 0
பொங்கல் பண்டிகையை முன்னிடு 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை…

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது – எடப்பாடி பழனிசாமி

Posted by - July 9, 2024 0
ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

வெள்ளிக்கிழமை எந்த சாமியைக் கும்பிடணும்? செல்வம், அமைதி, குடும்ப வளர்ச்சிக்கான முக்கிய வழிபாடுகள் 2025ல் வைரல்!

Posted by - December 12, 2025 0
2025ல் ஆன்மீக ஆர்வம் அதிகரிச்சதோட, “வெள்ளிக்கிழமை எதை கும்பிடணும்? எது செல்வத்துக்கு நல்லது?”ன்னு Google-ல search பண்ணுறவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. அதனால Friday devotional updates இப்போ…

நாடு முழுவதும் தீவிரமாய் பரவும் காய்ச்சல்… இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க… மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்..!

Posted by - March 4, 2023 0
மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *